பங்குனி உத்திரம் 2024 நேரம், தேதி

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பங்குனி உத்திரம் 2024 நேரம், தேதி பற்றிய பதிவுகள் :

பங்குனி உத்திரம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது முருகனுக்குரிய விரத நாள் என்பது தான். தமிழ் மாதங்களில் 12 வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமான உத்திரம் இவை இரண்டும் சேரும் நாள்தான் பங்குனி உத்திரம். 

அனைத்து மாதங்களிலும் உத்திரம் நட்சத்திரம் வருவதுண்டு. ஆனால் இந்த பங்குனி மாதத்தில் வருகின்ற உத்திரம் நட்சத்திரத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு. 

இந்த நன்னாளில் பக்தர்கள் முருகனுக்கு தேர் இழுத்தும், அபிஷேகம் செய்தும் அவர்களது வேண்டுதலின் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

வைகாசி பெளர்ணமி நாளை விசாகம் என்றும், தை மாத பெளர்ணமியை தைப்பூசம் என்றும், பங்குனி மாத பெளர்ணமி பங்குனி உத்திரம் என்றும், சித்ரா பெளர்ணமி என்றும், கார்த்திகை பெளர்ணமி திருவண்ணாமலை தீபம் என்றும், மார்கழி பெளர்ணமி திருவாதிரை என்றும் வைத்து ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமி நாளையும் விரத நாளாக கொண்டாடி வருகிறோம். 

பங்குனி, தை, வைகாசி உள்ளிட்ட பல மாதங்களில் வரும் பெளர்ணமி முருகனுக்குரிய விரத நாட்களாக கருதப்படுகிறது.

பங்குனி உத்திரம் இந்த ஆண்டு மார்ச் 25 ம் தேதி திங்கட்கிழமை துவங்குகிறது. மார்ச் 24ம் தேதி காலை 08.47 மணிக்கே உத்திரம் நட்சத்திரம் துவங்கி விட்டாலும், காலை 11.17 மணிக்குதான் பெளர்ணமி திதி துவங்குகிறது. 

ஆனால் மார்ச் 25 ம் தேதி தான் சூரிய உதய சமயத்தில் பெளர்ணமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் இணைந்து உள்ளன. இதனால் மார்ச் 25 ம் தேதியையே பங்குனி உத்திர நாளாக கணக்கில் எடுத்துக் கொண்டு விரதம் இருக்க வேண்டும்.

பங்குனி உத்திரம் புராணக்கதை

சிவனின் தியான நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதலாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம். 

இத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகு செய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, மந்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.

மேலும் இந்த திருநாளில் தான் முருகன் - தெய்வானை, ராமன் - சீதை, ரங்கமன்னார் - ஆண்டாள் போன்ற தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன. 

திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பட்டாபிஷேகம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணம், பிரசன்ன வேங்கடேஸ்வரர் குதிரை வாகனத்தில் எழுந்தருளுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் அற்புதமாக நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top