பெண்களுக்கு திருமணம் வரம் தரும் பங்குனி உத்திர விரதம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பெண்களுக்கு திருமணம் வரம் தரும் பங்குனி உத்திர விரதம் பற்றிய பதிவுகள் :

பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.

பங்குனி உத்திரத்தன்று திருமணமாகாத பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் விரைவில் கல்யாண வைபோகம் கைகூடும். 

அது போல திருமழப்பாடியில் நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்தான்.

திருமணத்தை எதிர்நோக்கியிருக்கும் கன்னியர்கள் செல்ல வேண்டிய ஆலயம் :

1. திருமணஞ்சேரி, 
2. ஆலங்குடி, 
3. ஸ்ரீவாஞ்சியம், 
4. திருமகல், 
5. திருவிடந்தை, 
6. திருவேதிக்குடி, 
7. பிள்ளயார்பட்டி, 
8. திருவீழிமிழலை, 
9. திருப்பரங்குன்றம், 
10. கன்னியாகுமரி, 
11. காஞ்சி, 
12. மாங்காடு, 
13. ஸ்ரீவில்லிபுத்தூர், 
14. திருச்செந்தூர், 
15. திருசத்தி முற்றம், 
16. கேரளத்தின் திருமணஞ்சேரி, 
17. ஆரியங்காவு,
18. மண முடிச்சநல்லூர், 
19. திருப்பாச்சேத்தி, 
20. திருவெணங்காடு, 
21. திருவேள்விக்குடி, 
22. திருநெல்வேலி, 
23. திருவாரூர், 
24. வேதாரண்யம், 
25. திருவிடை மருதூர், 
26. கும்பகோணம், 
27. திருநல்லூர், 
28. திருமழப்பாடி, 
29. திருப்பாலைத் துறை, 
30. பந்த நல்லூர், 
31. மதுரை, 
32. திருக்குற்றாலம், 
33. திருவேற்காடு, 
34. திருச்சோற்றுத்துறை, 
35. வைத்தீஸ்வரன் கோவில், 
36. திருநாகேஸ்வரம், 
37. பூவாளூர், 
38. சக்தி கோவில் திருமணமங்கலம், 
39. விசாலேஸ்வரன் கோவில் தாடிக்கொம்பு, 
40. திருத்துறைபூண்டி.

இந்த தலங்களில் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று திருமணம் விரைவில் முடிய வேண்டும் என வேண்டி கொண்டு வரலாம். வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும்.

திருமால் கன்னிகா தானம் செய்து வைக்க, பிரம்மன் வேள்வி நடத்த, சொக்கநாதரான சிவன் மீனாட்சியம்மையை பங்குனி உத்தரத்தில் மணக்கிறார். 

திருமண வைபத்தில் கன்னிகா தானம் அளிக்கும் சடங்குதான் முக்கியமானது. இக்கோல சுதைச் சிற்பம் தான் எல்லா திருமண மண்டபங்களிலும் மணமேடையின் பின்புற சுவரில் இடம் பெற்றுள்ளது. அவ்வளவு அழகிய அற்புதமான காட்சி இது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top