முருகனின் ஆறு முகங்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து முருகனின் ஆறு முகங்கள் பற்றிய பதிவுகள் :

''வேலனை வணங்குவதே நமது முதல் வேலை' என்று சொல்வது போல், வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும். 

வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவன் குமரன். தமிழ் மொழி மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட கடவுளாக முருகப்பெருமான் இருக்கிறார். இதனை 'முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான் முருகன்' என்று அருணகிரிநாதர் குறிப்பிடுகின்றார்.

ஒரு முகம், பூங்கொடி போன்ற இடையைக் கொண்டு குறத்தி வள்ளியுடன் புன்னகையோடு நமக்குக் காட்சி தரும் முகம்.

குற்றம் இல்லாமல் திகழ்வதற்காகப் பல கதிர்களை விரித்து வெளிச்சம் தரும் முகம் தான் இரண்டாவது முகம்.

முருகனைச் சுற்றி நின்ற படி அவரை புகழ்ந்து பாடுபவர்களைப் பார்த்து இனிமையாகச் சிரித்துக் கொண்டே பக்தர்களுக்கு அருள் தரும் முகம் தான் இந்த மூன்றாவது முகம்.

அந்தணர்கள் சிரத்தையாக அமர்ந்து வேதங்களை முழங்கி பல யாகங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை ஏற்றுக்கொள்கிறது முருகனின் நான்காவது முகம்.

முருகனின் முகத்தை நாம் சூரியனாகவோ அல்லது சந்திரனகவோ காணப்படும் முகம் தான் ஐந்தாவது முகம்.

உலகத்தில் எல்லாம் நல்லதாக நடந்துகொண்டிருக்கும் போது, நடுவே சில தீய சக்திகளும் திகழும். அப்போது தீய சக்திகளோடு போர் செய்து வெல்லும், அது மட்டுமல்லாமல் நமக்கு தீமைகளை அழித்து நன்மைகளை நிலைநாட்டும் முகம் தான் ஆறாவது முகம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top