உபதேசத் திருத்தலங்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து உபதேசத் திருத்தலங்கள் பற்றிய பதிவுகள் :

சிவபெருமானின் உபதேசம் நிகழ்ந்த திருத்தலங்களைத் தரிசிக்க அறியாமை நீங்கும், கல்வி - கலைஞானம் சித்திக்கும் என்பார்கள் பெரியோர்கள். அப்படியான சிவத்தலங்கள் சிலவற்றைக் காண்போம்.

உத்திரகோசமங்கை

உமையம்மைக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்த தலம் இது.

ஓமாம்புலியூர்

இந்தத் தலத்தில் ஸ்ரீதட்சிணா மூர்த்தி, உமாதேவிக்கு, பிரணவப் பொருளை உபதேசித்ததாகப் புராணம் சொல்கிறது.

இன்னம்பர்

அகத்தியர், இறைவனிடம் இலக்கண உபதேசம் பெற்ற தலம்.

ஆலங்குடி

சுந்தரர் இந்தத் தலத்தில் ஸ்ரீதட்சிணா மூர்த்தியை வழிபட்டு, பஞ்சாட்சர உபதேசம் பெற்றார்.

சிதம்பரம்

பைரவரின் பிரம்ம தத்துவத்தை உபதேசித்த தலம்.

திருப்பெருந்துறை

சிவன், குருவாக இருந்து, மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்த தலம்.

திருப்பனந்தாள்

அம்பாள், சுவாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.

திருக்கடவூர்

பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.

மயிலாடுதுறை

குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்ற ஊர்.

திருவானைக்கா

அம்பிகை ஞானோபதேசம் பெற்ற திருத்தலம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top