பங்குனி வசந்தகால ஸ்ரீலலிதா மஹாநவராத்திரி

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பங்குனி வசந்தகால ஸ்ரீலலிதா மஹாநவராத்திரி பற்றிய சிறப்பு பதிவுகள் :

அம்பாள் வழிபாடே சாக்தம் என்பது ஒவ்வொரு பெண் வடிவம் உயிருள்ள பெண் தெய்வம். நம் நாட்டில் மட்டும் தான் உயிருள்ள ஒரு பெண்ணை சக்தியின் வடிவமாக கன்யா பூஜை அல்லது சுவாஸினி பூஜை என்று வணங்கி வழிபடுகின்றனர்.

ஆதிசங்கரருக்கு முன்னால் காளி வழிபாடு வெகுவாக நரர்களை, மிருகங்களை பலியிடுதல் என இருந்துவந்தது. காளி மிகவும் உக்ரமானவள் என நம்பப்பட்டது. ஆதி சங்கரர் தேவியினை அன்புள்ளவளாக விளக்கி ஸ்ரீ சக்கரத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடும் முறையினை வகுத்துக் கொடுத்தார். தற்சமயம் இந்த முறைதான் நடைமுறையில் உள்ளது.

சிவன் பார்வதியுடன் சேர்ந்து இல்லை எனில் தன்னுடைய தொழிலை சரிவர செய்யமுடியாது என்றும் அவள் இல்லையெனில் சவத்தினை ஒத்தவர் எனவும் சௌந்தர்ய லஹரி கூறுகிறது. சக்தி மூன்று கடவுளர்கட்கும். தேவையானது இது அவர்கள் மூவருக்கும் பொருந்தும். இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். 

தேவிக்கு என எல்லாகோயில்களிலும் தனி சன்னதி உள்ளது. ஒவ்வொரு சிவன் கோயிலிலும் சக்தியினை அவரின் பலவித புகழ் வடிவிலே ஏதாவது ஒரு வடிவில் காண்கிறோம். 

தற்காலத்தில் தாயின் வழிபாட்டிற்கு சிறந்த முக்கியத்துவம் இருக்கிறது. இன்றைய உலக கஷ்டமான நிலையில் தேவியின் வழிபாடுதான் சுகத்தையும் அமைதியையும் கொடுக்க வல்லது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top