சித்ரா பௌர்ணமி வழிபாடு

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சித்ரா பௌர்ணமி வழிபாடு பற்றிய பதிவுகள் :

சித்ரா பௌர்ணமி அனைவராலும் சிறப்பாக கொண்டாடுகிற வைபவம். இந்த நாளில், ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. கோயிலின் சக்தியும் சித்திரை மாதத்தின் பெளர்ணமி நாளில், இன்னும் வீறுகொண்டு வெளிப்படும் என்பது ஐதீகம்.

கோயில்களுக்கு செல்ல முடியாதவர்கள், தங்கள் வீட்டின் பூஜை அறையையே கோயிலாக பாவித்து, நாமே பூஜைகளும் வழிபாடுகளும் செய்யலாம். மற்ற நாட்களைவிட, சித்ரா பெளர்ணமியன்று வீட்டில் செய்யப்படும் பூஜைக்கு, பன்மடங்கு பலன் அதிகம்.

ச‌ித்திரை மாதத்துக்கு இருக்கும் சிறப்புகள் அதிகம். சித்திரைத் திங்கள் விழா என்பது சூரியனின் நகர்வு நிலையைக் கொண்டு தமிழர்களால் கொண்டாடப்படும் ஒருநாள் ஆகும். சித்திரை மாதம் வசந்த காலத்தின் தொடக்கம் என்பதால் செடிகொடிகள் பூத்துக் குலுங்குகின்ற காலமாக அமைகிறது.  

சித்ரா பெளர்ணமி நாளில், ‌குலதெய்வ வழிபாடு சிறப்பானது. மேலும் பித்ரு வழிபாடு சித்ரா பெளர்ணமி நாளின் மிக முக்கியமானது.

எனவே இந்த நாளில், மறக்காமல் விளக்கேற்றி, தெய்வங்களை வழிபடுங்கள். காலை வழிபாட்டின் போது, சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் என நைவேத்தியம் செய்யுங்கள்.

அதேபோல், மாலையில் பூஜை அறையில் விளக்கேற்றுங்கள். வீட்டு வாசலில் இரண்டு அகல் விளக்குகள் கொண்டு விளக்கேற்றுங்கள். மீண்டும், குலதெய்வம், இஷ்ட தெய்வம், வீட்டு தெய்வங்களுக்கு தீபதூப ஆராதனைகள் செய்யுங்கள். முடிந்தால், குடும்பத்தார் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவது இன்னும் சிறப்பு வாய்ந்தது.

மாலை பூஜையில், பயறு வகைகள் கொண்டு சுண்டல் மற்றும் கேசரி, சர்க்கரைப் பொங்கல், அவல் பாயசம் என ஏதேனும் ஒன்றைக் கொண்டு நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கும் வழங்குங்கள். அப்படியே வீட்டு வாசலில் இருந்தபடி, சந்திர தரிசனம் செய்வது சிறந்தது.

மனதார சந்திர பகவானிடம் வேண்டி முக்கியமாக, இயலாதவர்களுக்கு தயிர் சாதம் அல்லது எலுமிச்சை சாதம் அன்னதானமாக வழங்குவது மேலும் சிறப்பானது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top