குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இப்படி பெயர்ச்சி அடையும்போது அவர் பார்க்கும் ராசிகள் புனிதம் அடைந்து நன்மைகள் நடக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
குரு பகவான், தான் நின்ற (ராசி) இடத்திலிருந்து 5வது ராசியையும், 9வது ராசியையும் பார்ப்பார் மற்றும் 7வது ராசியை நேர் பார்வையாக பார்ப்பார்.
இதுமட்டுமல்லாமல், தான் நின்ற ராசிக்கு அடுத்த ராசியையும் அதாவது 2வது வீடு மற்றும் 11வது வீட்டையும் சூட்சுமப் பார்வையின் மூலம் பார்ப்பார். குரு பகவானின் பார்வையானது 5, 7, 9 மற்றும் 2, 11 என ஐந்து ராசிகளை பார்ப்பார்.
ஒருவர் ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் குரு பார்வை பட்டால் அந்த தோஷம் நீங்கும் என்பது ஜோதிட விதி.
அதாவது ஒருவருக்கு திருமணத்தில் தடை இருப்பதாக இருந்தால், குரு பார்வை படும்போது தடை நீங்கி திருமணம் கைகூடும் என ஜோதிடம் உறுதியாக கூறுகிறது.
விதியை மாற்றும் வல்லமை, குரு பகவானுக்கு மட்டுமே உள்ளது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
குரு :
ஜோதிட சாஸ்திரத்தில் தன காரகன் என்றும், புத்திர காரகன் என்றும், தேவகுரு என்றும் அழைக்கப்படுகின்றவர் தான் பிரகஸ்பதியான குரு. மிகவும் உன்னதமான சுப காரகத்துவங்களை செய்வதில் முக்கியத்துவம் வாய்ந்தவர். மேலும் சுப காரியங்களுக்கான காரண கர்த்தாவே இவர்தான் என்று கூறினாலும் மிகையல்ல. அதனால் தான் என்னவோ குருவின் பார்வை கோடி நன்மைகள் என்று கூறுவார்கள்.
வாக்கிய பஞ்சாங்கம் :
மங்களகரமான குரோதி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சித்திரை மாதம் 18ஆம் தேதி (01.05.2024) இயற்கை சுபரான குருதேவர், கிருத்திகை முதல் பாத நட்சத்திரத்தில் இருந்து கிருத்திகை இரண்டாம் பாத நட்சத்திரமான ரிஷப ராசிக்கு அதாவது மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சஞ்சாரம் செய்ய உள்ளார்.
திருக்கணித பஞ்சாங்கம் :
மங்களகரமான குரோதி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சித்திரை மாதம் 18 ஆம் தேதி (01.05.2024) இயற்கை சுபரான குருதேவர், கிருத்திகை முதல் பாத நட்சத்திரத்தில் இருந்து கிருத்திகை இரண்டாம் பாத நட்சத்திரமான ரிஷப ராசிக்கு அதாவது மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சஞ்சாரம் செய்ய உள்ளார்.
குருவின் பார்வை படும் ராசிகள் :
குருவானவர் தான் நின்ற ராசியில் இருந்து
ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியையும்,
ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியையும்,
ஒன்பதாம் பார்வையாக மகர ராசியையும் பார்க்க இருக்கின்றார்.
குருவின் பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் பின்வருமாறு,
✓ மேஷம்
✓ கடகம்
✓ கன்னி
✓ விருச்சிகம்
✓ மகரம்
குருவின் பெயர்ச்சியால் அதிஷ்டம் அடையும் ராசிகள் பின்வருமாறு,
✓ சிம்மம்
✓ துலாம்
✓ விருச்சிகம்
✓ தனுசு
✓ மகரம்
✓ மீனம்
தொழிலில் முன்னேற்றம் அடையும் ராசிகள் :
✓ மேஷம்
✓ தனுசு
✓ கும்பம்
பதவி உயர்வு கிடைக்கும் ராசிகள் :
✓ விருச்சிகம்
✓ மகரம்
✓ மீனம்
இயற்கை சுபரான குரு தனது 5ஆம் பார்வையின் பலத்தால் புத்திர இடத்திற்கு சாதகமாக இருப்பதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.
கடகம்
இயற்கை சுபரான குரு தனது 7ஆம் பார்வையால் புத்திர பாவகத்தை பார்ப்பதால் இதுவரை குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம், படிப்பு, வேலைவாய்ப்பு, சுபகாரியங்கள் ஆகியவை எல்லாம் நன்றாக இருக்கும்.
கன்னி
இயற்கை சுபரான குரு தனது 9ஆம் பார்வையின் பலத்தால் புத்திர இடத்திற்கு சாதகமாக இருப்பதால் இனி யோகம் தான். குழந்தைப்பேறு அல்லது வளர்கின்ற குழந்தைகளின் முன்னேற்றத்தில் இருந்த தடைகளை நீங்கி நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
குருவின் பார்வை பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
மீனம்
தேவ குருவானவர் தன்னுடைய ஏழாம் பார்வையாக ஒன்பதாம் பாவகத்தை பார்ப்பதினால் குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை உண்டாகும்.
குரு பெயர்ச்சியில் ஏற்படும் சுப பலன்களை அவரவர் ஜென்ம ஜாதகத்தில் உள்ள திசாபுத்திக்கு ஏற்ப குருபகவான் அளிப்பார். அதாவது திசா புத்தியானது உங்களுக்கு சாதகமாக இருந்தால் அதிக அளவு நன்மையையும், குறைந்த அளவு தீமையையும் தரவல்லது.