பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும்.
கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும்.
இவை ரகசியங்களுள் ரகசியமானது இதை பாராயணம் செய்தால் ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி, வாராகி, மாதங்கி, அஸ்வாரூடா, சம்பத்கரி, சிவ விஷ்ணுவை வழிபட்ட பலனை தருவாள்
இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை. இதனை பாராயணம் செய்தால் நோய்களைப் போக்கும். ஐஸ்வர்யயாதி செல்வத்தை அளிக்கும்.
அபமிருத்யுவை போக்கும். (அப மிருத்யு என்றால் அகால மரணம்) நீண்ட ஆயுள் தரும். பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும். பூத பிசாச, தீயசக்தி உபாதைகள் விலகும்.
இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள், கல்வி கலை ஞானம், ஆனந்தம் பெருகும்.
எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்து விடுவாள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான். இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள் விலகிவிடும்.
ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீலலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.
லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின் அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும்.