மீனாட்சி அம்மன் தினமும் 8 விதமாக, அதாவது எட்டு விதமான சக்திகளாக பாவிக்கப்பட்டு, பூஜை நடைபெறுகிறது.
✓ நடைதிறப்பின் போது - குழந்தையாக பாலா திரிபுர சுந்தரியாக.
✓ அதிகாலை - புவனேஸ்வரி
✓ காலை - கெளரி
✓ மதியம் - சியாமளா
✓ சாயரக்ஷை - இராஜ மாதங்கி
✓ அர்த்த ஜாமம் - பஞ்சதசி
✓ பள்ளியறை செல்கையில் - ஷோடசி எனும் லலிதையாக,
✓ திருவனந்தல் பள்ளியறையில் - மஹா ஷோடசி
அன்னை மீனாட்சிக்கு தினமும் 5 கால பூஜைகள் நடைபெறும். அந்த சமயங்களில் காட்சி தருவதை காண முடியும்.
காலையில் சிறுமி போன்றும், உச்சி வேளையில் மடிசார் புடவை அணிந்தும், மாலையில் தங்க கவசம் மற்றும் வைர கிரீடத்திலும், இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டு புடவை அணிந்தும் அன்னை காட்சி தருவாள். மதுரை மீனாட்சி எனும் அங்கயற்கண்ணி.