அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் சிறப்புகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் சிறப்புகள் பற்றிய பதிவுகள் :

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலானது சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டதாக கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன. 

கோயிலின் மூலஸ்தானம் கட்டி முடிந்து பல நூறு ஆண்டுகள் கழித்து சுற்றுச்சுவர்கள் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. 

கோயிலின் உள்ளே நூற்றுக்கணக்கான தூண்களின் சிற்பங்களும் உள்ளன. காசி விஸ்வநாதர் சன்னிதிக்கும், அன்னபூரணி அம்மன் சன்னதிக்கும் தனித்தனி கோபுரங்கள் உள்ளன. 

கோயிலின் அருகில் தேர்த் திருவிழா சமயங்களில் உற்சவச் சிலைகளை தேர் மீது அமர்த்துவதற்காக கல்மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் எதிரே தெப்பக்குளம் அமைந்துள்ளது. 

ஆலயம், பாண்டியர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 1800 ஆம் வருடம் வரை இந்தக் கோயிலில் 5 கால பூஜையும், வைகாசிப் பெருவிழாவும், தேரோட்டம் நடந்ததாகவும், செவிவழிச் செய்திகள் உள்ளன. இந்தத் தேரோட்டத்தில் தென்மாவட்ட மக்கள் அதிகமாக கலந்துகொள்கின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top