நன்மைகள் அனைத்தையும் வழங்கும் தெய்வமாக இருக்கும் விநாயகரை வழிபட சிறந்த தினங்கள் மாதந்தோறும் வருகின்ற சதுர்த்தி தினங்களாகும்.
அந்த வகையில் ஆனி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தில் விநாயகரை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் என்ன என்பதை நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்திற்கு நான்காவதாக வருவது சதுர்த்தி தினம் எனப்படுகிறது. இந்த இரண்டு சதுர்த்தி தினம் விநாயகர் பெருமானை வழிபடுவதற்குரிய சிறந்த திதி தினமாகும்.
அதிலும் ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி தினத்தில் விநாயக பெருமானை வழிபடுவதால் நன்மைகள் பல உண்டாகிறது.
ஆனி வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று அதிகாலை எழுந்து நீராடி, உணவு ஏதும் உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதனாகிய விநாயகப்பெருமான் நினைவோடு விரதம் இருக்க வேண்டும்.
உணவு சாப்பிட்டாக வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிடலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கோ அல்லது அவரது சந்நிதிகோ சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனை, பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும்.
வழிபாடு முடிந்ததும் ஆலயத்தை எட்டு முறை வலம் வர வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.
ஆனி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு விரதம் அனுஷ்டித்து வழிபடுபவர்களுக்கு சனி கிரக தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் உண்டாகும்.
நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய்கள் நீங்க பெறுவீர்கள். திடீர் ஆபத்துகள் ஏற்படுவதிலிருந்து காக்கும். கல்வி, கலை மற்றும் தேர்வுகளில் சிறந்த நிலையை பெறலாம்.
தொழில், வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்கள், ஒப்பந்தங்கள் கிடைக்கபெற்று நல்ல தனவரவு உண்டாகும். வீட்டில் செல்வ சேமிப்பு உயரும்.