ஆடி மாத கார்த்திகை நட்சத்திர வழிபாடு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆடி மாத கார்த்திகை நட்சத்திர வழிபாடு பற்றிய பதிவுகள் :

கார்த்திகை என்பது ஆறு நட்சத்திரக் கூட்டங்களின் பெயர். முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களே கார்த்திகை நட்சத்திரங்களாகத் திகழ்ந்து ஒளிவீசுகிறார்கள். 

முருகப்பெருமான் தன் தாயினும் மேலாகப் போற்றும் கார்த்திகைப் பெண்களின் தினத்தில் முருகனை வழிபட்டால் முருகன் மிகவும் மகிழ்வான். குறிப்பாக, ஆறுமுகனாக முருகனை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது.

மேலும் கார்த்திகை நட்சத்திரம் என்பது சூரியபகவானுக்குரிய நட்சத்திரம். சூரியனே ஆரோக்கியத்துக்கு அதிபதி. எனவே, கார்த்திகை நட்சத்திர நாளில் முருக வழிபாடு செய்வதன் மூலம் நீடித்த ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெறலாம். 

பொதுவாகவே, கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் நல்ல அழகோடும் பொலிவோடும் காணப்படுவர். அவர்கள் தங்கள் கார்த்திகை தினத்தன்று விரதமிருந்து வழிபட்டால் மேலும் அழகும் அறிவும் பெறுவர். அதிலும் குறிப்பாக, ஆடி கார்த்திகை அன்று முருகனை வழிபட்டால் அவை மேம்படும்.

எனவே, இந்த நாள் முழுவதும் முருகப்பெருமானின் சடாட்சர மந்திரமான, `சரவணபவ’ என்னும் மந்திரத்தை ஓதுவோம். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், வேல் வகுப்பு, வேல்மாறல் பாராயணம் ஆகியவற்றை மேற்கொள்வோம். 

இந்த நாளில் முருகப்பெருமானுக்கு அவல் பாயாசம் செய்து நிவேதனம் செய்வது மிகவும் விசேஷம். இதன் மூலம் குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் சச்சரவுகள் குறைந்து அமைதியும் அன்பும் பெருகும் என்பது ஐதிகம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top