ஆடி மாதம் என்றால் தெய்வ வழிபாட்டுக்கு உகந்தது. இந்த மாதம் முழுவதும் நாகதேவி பூஜை என்று சொல்லப்படும் நாக வழிபாடு எல்லா இடங்களிலும் அமோகமாக நடைபெறும். இந்த வழிபாட்டு முறை, காலம் காலமாக நடந்து வருகிறது.
ஆதிசேஷன் என்ற நாகத்தின் மடியில்தான் விஷ்ணு பள்ளி கொண்டுள்ளார். சுப்பிரமணிய சுவாமியின் காலடியில் படம் எடுத்த நிலையில் நாகம் உள்ளது. நாக வழிபாடு என்பது வேத காலத்தில் இருந்தே இருக்கிறது.
மனிதரின் ஜாதக அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவது நவகிரகங்கள். இதில் ராகு, கேது கிரகங்கள் நாக வடிவுடையவை.
முற்பிறவியில் செய்த பாவங்களால் இந்த பிறவியில் பல துன்பங்களை அனுபவித்து வருகிறோம். புண்ணியம் செய்திருந்தால் இந்த பிறவியில் நல்ல பலன்களை அடைந்து வருகிறோம் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
இதில் நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமலும், பிறந்த குழந்தைகள் ஊனமுற்றதாகவும், நோயால் அவதிப்படுவதும் குடும்பத்தினர் பிரிந்தும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவர்.
இந்த துன்பங்களிருந்து மீளவும், நல்ல பலன்களை பெறவும் நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும். நாக தேவதைகளின் அருளால் தோஷங்கள் விலகி நல்ல பலன்கள் பெறலாம் என்பது ஐதீகம்.
பிரதோஷ நாட்களில் மௌன விரதம் இருந்து உமாமகேஸ்வரி, நாகவல்லி அம்மனையும் மனம் உருகி வேண்டி பிரார்த்தனை செய்து வந்தால் நாக தோஷம் படிப்படியாக குறைந்து நல்ல பலன்கள் ஏற்படும்.
சகலவிதமான செல்வங்களையும் பெறலாம். நாக சதுர்த்தி, நாகபஞ்சமி, கருட பஞ்சமி ஆகிய விரதங்களை அவரவர்கள் தங்களது விருப்பம் போல மேற்கொள்ளலாம். வழிபாடு வேறுபட்டாலும் நோக்கம் ஒன்றாக இருப்பதால் பலன்கள் பெறுவதில் எவ்வித குறையும் இருக்காது.
Ovammal family prayer
ReplyDeleteNaveesha
Jananai