கிருஷ்ண ஜெயந்தி - 2024

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கிருஷ்ண ஜெயந்தி பற்றிய சிறப்பு பதிவுகள் :

மகாவிஷ்ணுவின் 9-வது அவதாரம், கிருஷ்ணர் அவதாரம். கிருஷ்ணராக அவர் அவதரித்த நாளை தான் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். இவ்வருடம் கிருஷ்ண ஜெயந்தியானது ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது. 

இந்த நாளில் வழிபாடு செய்வதால் குழந்தை பாக்கியம் உள்பட பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். கவலைகள் நீங்கவும், நினைத்தது நிறைவேறவும் கிருஷ்ணரின் அருள் பூரணமாக கிடைக்கவும் அந்த நாளில் கிருஷ்ணருக்கு படைக்க வேண்டிய பொருள்கள் குறித்து நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

பூக்கள்

கிருஷ்ணரின் பொற்பாதங்களுக்கு மலர்களை அர்ப்பணிப்பது உங்களுக்கு ஆசியை பெற்று தரும். அதை வெறுமனே சமர்பிக்காமல் 3 அல்லது 3இன் மடங்கு (3,6,9..) எண்ணிக்கையில் அர்ப்பணம் செய்ய வேண்டும். 

பூக்களின் காம்புகள் பகவானை நோக்கும்படி வையுங்கள். தாழம்பூ, சந்தனம், மல்லிகை, சம்பா, சாய்வாலா, ஆம்பர் போன்ற நறுமணம் உடைய ஊதுபத்திகளை பயன்படுத்துங்கள். 

மயிலிறகு

கண்ணபிரானுக்கு முக்கிய அடையாளம் அவரின் தனி கிரீடத்தில் இருக்கும் மயிலிறகு. பொதுவாக மயிலிறகு தெய்வீகம் நிறைந்ததாக கருதப்படுகிறது. 

இந்த மயிலிறகு நேர்மறையான சக்தியை ஈர்த்து கொள்ளும் பண்பு கொண்டது. கிருஷ்ணருக்கு விருப்பமான இந்த மயிலிறகை பூஜையில் வைத்து வழிபட்டால் பூரண அருள் கிடைக்கும். 

துளசி

பகவத் கீதையில் எதை படைத்தால் தான் திருப்தியாவேன் என்பதை கிருஷ்ணரே வெளிப்படுத்தியிருப்பார். அந்த பொருள்களை அன்றைய தினம் பூஜையில் வைப்பவர்களுக்கு கிருஷ்ணரின் அருள் பூரணமாக கிடைக்கும். 

அவை தூய துளசி இலை, 1 புஷ்பம், ஒரு உத்தரணி தீர்த்தம் ஆகியவை தான். மனம் நிறைந்த பக்தியோடு இவற்றை படைத்தால் கிருஷ்ணர் அதை ஏற்று கொள்வார் என்பது நம்பிக்கை. அதுவும் துளசியை அர்ப்பணம் செய்வதால் உங்களுடைய பொருளாதார பிரச்சனைகள் நீங்கி செல்வம் செழிக்கும். 

அவல்

பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த பொருட்களில் ஒன்றுதான் அவல். வீட்டில் உள்ள பழைய அவலை பயன்படுத்தாமல் கடையில் குறைந்தபட்டம் ரூ.10க்கு அவல் வாங்கி படைத்தாலும் போதும். 

அவல் பாயசம் செய்து கண்ணனுக்கு படைத்து வீட்டுக்கு அருகே உள்ள குழந்தைகளுக்கு கொடுத்தாலும் இன்னும் புண்ணியம் கிடைக்கும்.  

அன்னதானம்

கிருஷ்ண ஜெயந்தியில் வீட்டில் வழிபாடை முடித்த பிறகு உணவில்லாமல் சிரமப்படும் ஒரு சிலருக்காவது அன்னதானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும். பக்தியும் இரக்கமும் கிருஷ்ணரை கவரும் முக்கிய குணங்கள். அதனால் அந்த நாளில் உங்களால் முடிந்த அளவுக்கு உதவுங்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top