புரட்டாசி மாத சிறப்புகள் பகுதி 2

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து புரட்டாசி மாத சிறப்புகள் பற்றிய பதிவுகள் :

சத்யநாராயண பூஜையை ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று மாலை சந்திரன் உதயமாகும் நேரத்தில் செய்ய வேண்டும். 

ஒருவர் இந்த விரதத்தை முறையாக கடைபிடித்தால் அனைத்து விதமான துன்பங்களில் இருந்தும் விடுபடலாம். காக்கும் கடவுளான விஷ்ணு பகவானுக்கு நடத்தப்படும் பூஜையே சத்யநாராயண பூஜையாகும். 

பெருமாள் எடுத்த பலவிதமான அவதாரங்களில் சத்யநாராயணர் அவதாரமும் ஒன்று. இந்த பூஜை திருமணம், முக்கிய திருவிழாக்கள், வீடு, நிலம் வாங்க என எந்த ஒரு நல்ல காரியத்தின் போதும் நடத்தப்படுகிறது. 

எந்த ஒரு காரியத்திலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று மனதில் பிரார்த்தித்துக் கொண்டு இந்த பூஜையை செய்ய வேண்டும். சத்யநாராயண பூஜையை நாம் ஒவ்வொரு பௌர்ணமியன்று செய்தால் மிகவும் நல்லது.

பௌர்ணமி அன்று உபவாசம் இருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணப் பேறு கிடைக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். 

உடல் மற்றும் மனம் சார்ந்த குறைபாடுகள் நீங்கும். பொருளாதார கஷ்ட நிலைகள் நீங்கி செல்வச்சேர்க்கை உண்டாகும். 

பௌர்ணமி, சந்திரனுக்குரிய தினம் ஆகும். மனோகாரகனான சந்திரனே மனஅழுத்தம், மனக்குழப்பம், தடுமாற்றம், உடல் பலவீனம் போன்ற பலவிதமான பிரச்சனைகளுக்கு காரணமானவராக சொல்லப்படுகிறார். இதனால் ஜாதகத்தில் சந்திரனின் நிலை சரியாக பௌர்ணமியில் விரதம் இருப்பது சிறப்பு.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top