விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட வரலாறு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட வரலாறு பற்றிய பதிவுகள் :

பல ஆண்டுகளாக இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் விநாயக சதுர்த்தி விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அவரவர் வீட்டில் இதற்கான விசேஷமாக பூஜை செய்து, விநாயகருக்கு பிடித்த பண்டங்களை சமைத்து நைவேத்தியமாக வைத்து கொண்டாடுவது ஒரு வழக்கமாக இருக்கும்.

மற்றொரு பக்கம் அவரவர் வசிக்கும் தெரு அல்லது சமூகங்கள் சின்ன சின்ன குழுவாக சேர்ந்தும் கொண்டாடுவார்கள். இதை தவிர்த்து சிறியது முதல் விண்ணை முட்டும் அளவுக்கு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்வார்கள்.

ஆனால், விநாயகர் சதுர்த்தி சிலை வழிபாட்டு கொண்டாட்டம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் முதன்முதலாக மகாராஷ்டிர மாநிலத்தில்தான் தொடங்கியது என்று கூறப்படுகிறது.

மராட்டிய மன்னரான சிவாஜி மகாராஜாவால் இந்த பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

மக்கள் அனைவரும் இதைக் கொண்டாட வேண்டும் என்றும் பாரம்பரியத்தை வளர்த்து, மக்களிடையே ஒற்றுமையை அதிகரிக்க வேண்டும் என்றும், ஒருங்கிணைந்து கொண்டாட வேண்டும் என்று மன்னர் ஊக்குவித்ததாக கூறப்படுகிறது.

தொடக்கத்தில் மகாராஷ்டிராவில் மட்டுமே விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த விநாயகர் சதுர்த்தி, காலம் செல்ல செல்ல இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. அதற்கு பிறகு தற்பொழுது உலகம் முழுவதிலும் கூட விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியா உட்பட நேபாள், மொரிஷியஸ், தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வாழும் இந்தியர்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top