இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் வரக் கூடிய சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். புரட்டாசி முதல் சனிக்கிழமையில், மகாளய பட்ச காலத்தில் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தையும் போக்கக் கூடிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.
இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
சங்கடஹர சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து, குளித்து விட்டு, வீட்டை சுத்தம் செய்து, விநாயகரின் சிலை அல்லது படத்திற்கு பூக்கள், அருகம்புல் சாற்றி வழிபட வேண்டும்.
நைவேத்தியமாக பழங்கள், மோதகம், கொழுக்கட்டை படைத்து வழிபடலாம். நாம் முழுவதும் விநாயகரின் மந்திரங்களை சொல்லியபடி இருக்க வேண்டும்.
மாலையில் விநாயருக்கு நடக்கும் அபிஷேகங்கள், பூஜைகள் ஆகியவற்றை தரிசித்து, சந்திரனை தரித்த பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இப்படி விரதம் இருப்பது விநாயகரும் நமக்கும் இடையேயான உறவை பலப்படுத்தும்.
இந்த ஆண்டு புரட்டாசி சனிக்கிழமையுடன் இணைந்து வருவதால் விக்னராஜ சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் பெருமாளின் அருளும் நமக்கு கிடைக்கும்.
விநாயகர், பெருமாள் இருவரும் நம்முடைய துன்பங்கள் அனைத்தையும் போக்கி மகிழ்ச்சியான வாழ்க்கையையும், இறுதியில் மோட்சத்தையும் தரக் கூடியவர்கள்.
இதனால் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று விளக்கேற்றி, மனதார வழிபட்டாலும் இறை அருள் முழுவதுமாக கிடைக்கும்.