நவராத்திரி திருவிழாவில் கொலு அமைக்கும் முறைகள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நவராத்திரி திருவிழாவில் கொலு அமைக்கும் முறைகள் பற்றிய பதிவுகள் : 

கீழேயிருந்து மேலாக ஓரறிவில் தொடங்கி உயர்நிலையுள்ள  இறைவன் பொம்மைகள்  வைக்கப்படுகின்றன. இவை மனித வாழ்க்கையின் வாழ்க்கையின் ஒவ்வொரு தத்துவத்தை உணர்த்துகின்றது.

• முதலாம் படி - ஓரறிவு உயிர்களான புல், செடி,‌கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள்.

• இரண்டாம் படி - ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.

• மூன்றாம் படி - மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.

• நான்காம் படி- நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகள் .

• ஐந்தாம் படி - ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள்.

• ஆறாம் படி - ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள். எந்த உயிருக்கும் இல்லாத சிந்திக்கும் சக்தியை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளார். 

• ஏழாம் படி - மனித நிலையிலிருந்து உயர் நிலைகளை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார், புத்தர், ராகவேந்திரர், அகத்தியர்) போன்றோரின் பொம்மைகள்.

• எட்டாம் படி - தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.

• ஒன்பதாம் படி - பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர். அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதி சக்தி வைக்க வேண்டும்.

இந்த ஒன்பதாம் படியில் முதலில் விக்னங்களை தீர்த்து வைக்கும் விநாயக பொம்மையை வைத்தப்பிறகு மற்ற மொம்மைகளை வைக்க வேண்டும் என ஆதிபராசக்தி சொல்லி இருப்பதாக 'தேவி பாகவதம்' சொல்கிறது.

அடுத்ததாக மூம்மூர்த்திகளையும், தேவியர்களையும் வைக்கலாம். லட்சுமிக்கும், சரஸ்வதிக்கும் இடையே சக்திதேவியை வைக்க வேண்டும்.

மனிதன் படிப்படியாக தன்  ஆன்மீக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவது கொலு படியாகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top