கல்வியில் சிறந்து விளங்க குழந்தைகள் வழிபட வேண்டிய வித்யாரம்பம் பூஜைகள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கல்வியில் சிறந்து விளங்க குழந்தைகள் வழிபட வேண்டிய வித்யாரம்பம் பூஜைகள் பற்றிய பதிவுகள் :

கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் முப்பெரும் தேவியர்களில் கலைமகள் என அழைக்கப்படுபவர் சரஸ்வதி ஆவார். நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் கொலு வைத்தவர்கள் வைக்காதவர்கள் என அனைவருமே வழிபடக்கூடிய நாளாக கருதப்படுகிறது .

கல்வி மட்டுமே ஒரு மனிதனுக்கு அனைத்து நன்மைகளையும் கொடுக்க வல்லது. அப்படிப்பட்ட கல்வியின் ஸ்ருபமாக சரஸ்வதி தேவி திகழ்கிறார். சரஸ்வதி தேவியின் கடாட்சம் பெறவும், ஞானம், நினைவாற்றல், கலைகளில் தேர்ச்சி போன்றவற்றில் சிறப்பாக திகழ கலைமகளை பிரார்த்தனை செய்வதுதான் சிறப்பாக கருதபடுகிறது .

இந்த வருடம் சரஸ்வதி பூஜை அக்டோபர் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் புதிதாக கல்வி அல்லது கலை தொடர்பான செயல்களை துவங்கலாம். சூரிய அஸ்தமத்திற்கு பிறகு மாலை 6 மணிக்கு மேல் சரஸ்வதி தாயாருக்கு வெந்தாமரை அல்லது செம்பருத்தி பூ போன்ற மலர்களால் அலங்கரித்து புத்தகங்கள் மற்றும் கலை தொடர்பான பொருட்களை வைத்து பிறகு பூஜைக்கு தேவையான பொருள்கள், அன்றைய தினத்தின் நெய்வேத்தியங்கள் ஆகியவற்றை சமர்ப்பித்து தீப தூப ஆராதனை உடன் பூஜையை செய்யத் துவங்கலாம்.

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை அன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் கற்றுத்தர உகந்த நாளாக கருதப்படுகிறது. வித்யா என்றால் அறிவு ஆரம்பம் என்றால் துவக்கம் ஆகும். இந்த அழகான சடங்கு முறை நமது பாரம்பரியமாக விளங்குகிறது. இன்றைய தினத்தில் 2-5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நெல் அல்லது அரிசியில் எழுத துவங்க செய்யலாம்.

அக்டோபர் 11 வெள்ளிக்கிழமை சரஸ்வதி பூஜை அன்று காலை 6 மணியிலிருந்து 9:00 மணி வரையிலும் ,மதியம் 1 மணியிலிருந்து நான்கு மணி வரையிலும், மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரையிலும் வித்யாரம்பம் செய்து கொள்ளலாம். பிறகு அடுத்த நாள் அக்டோபர் 12ஆம் தேதி சனிக்கிழமை காலை காலை 7-8 மணி வரையிலும் 10:30 லிருந்து 1 மணி வரையிலும் மாலை 5-7 மணி வரையிலும் வித்யாரம்பம் செய்து கொள்ளலாம்.

வித்யாரம்பம் செய்யும் நாள் குழந்தைகளுக்கு புத்தாடை உடுத்தி பூஜைக்கு தேவையான பொருட்களை வைத்து ஒரு படி நெல் அல்லது ஒரு படி அரிசியை தட்டில் பரப்பி வைத்து வைக்க வேண்டும். பிறகு குழந்தையை பெரியவர்கள் மடியில் வைத்து தட்டில் அவர்களை கையைப் பிடித்து பிள்ளையார் சுழி முதலில் எழுதி பிறகு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை எழுதி அதன் பிறகு அ என்ற தமிழ் முதல் எழுத்தையும் துவங்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகளின் வாழ்நாள் முழுவதும் கல்வி துணையாக நிற்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் கல்வி கற்க துவங்கும் முன் இறை வழிபாடு செய்து துவங்குவதால் குழந்தைகளுக்கு இறை பக்தியும் உண்டாகும் ,சரஸ்வதி தேவியின் பரிபூரண அருள் கிடைத்து அந்த குழந்தை கலைகளில் சிறந்த குழந்தையாக திகழுவதாகவும் நம்பப்படுகிறது.

கல்வி கற்பதன் மூலம் தான் இந்த பரந்த உலகத்தின் ஞான தேடலை அடைய முடியும். வெற்றியின் அடையாளமாக விஜயதசமி விளங்குவது போல் கல்வியின் அடையாளமாக சரஸ்வதி பூஜை விளங்குகிறது .

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top