நவராத்திரி நான்காவது நாள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நவராத்திரி நான்காவது நாள் பற்றிய பதிவுகள் :

நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் அனைத்திலும் இருந்து விடுபடவும், வாழ்க்கைக்கு வேண்டிய நலன்கள் அனைத்தையும் பெறுவதற்கும் உரிய காலமாக நவராத்திரி காலம் சொல்லப்படுகிறது. 

அதனால் தான் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் கடைபிடித்து, அம்பிகையை பலவிதங்களில் வழிபட வேண்டும் என சொல்லப்படுகிறது.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் துர்க்கை வழிபாட்டிற்குரியவையாகும். இதை தொடர்ந்து வரும் அடுத்த மூன்று நாட்களும் மகாலட்சுமிக்கு உரிய வழிபாட்டு நாட்களாகும். நவராத்திரியின் 4ம் நாள் என்பது மகாலட்சுமி வழிபாட்டின் துவக்க நாளாகும். 

பணம் மட்டுமின்றி அனைத்து விதமான செல்வங்களும் வாழ்வில் குறைவின்றி கிடைப்பதற்கு மகாலட்சுமியின் அருள் நிச்சயம் தேவை. அப்படிப்பட்ட மகாலட்சுமியை நம்முடைய வீட்டிற்கு அழைத்து, அவளின் மனம் மகிழுழம் படி வழிபட்டு, நம்முடைய வாழ்க்கைக்கு வேண்டிய நலன்கள் அனைத்தையும் பெறுவதற்கான நாளே இந்த நவராத்திரியின் நான்காம் நாளாகும்.

மகாலட்சுமியின் அருளை பெற்றவர்களுக்கு பெருமாளின் அருளும் தானாக கிடைத்து விடும். பெருமாளுக்கு புரட்டாசி மாதத்தில் மகாலட்சுமியையும், பெருமாளையும் சேர்த்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். அஷ்டலட்சுமிகளில் எந்த லட்சுமியின் வடிவத்தையும் நாம் வழிபடலாம். 

ஆனால் தைரிய லட்சுமியை வழிபட்டால், தைரிய லட்சுமி இருக்கும் இடத்திற்கு மற்ற அனைத்து லட்சுமிகளும் அழைக்காமலே வந்து விடுவார்கள் என்பது ஐதீகம். எந்த இடத்தில் தைரிய லட்சுமி நிரந்தரமாக குடியிருக்கிறாளோ அந்த இடத்தில் அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்வார்கள்.

நவராத்திரி 4ம் நாள் வழிபாட்டு முறை :

அம்மனின் வடிவம் - மகாலட்சுமி
கோலம் - படிக்கட்டு வகை கோலம்
மலர் - ஜாதிமல்லி
இலை - கதிர்பச்சை
நைவேத்தியம் - கதம்ப சாதம்
சுண்டல் - பட்டாணி சுண்டல்
பழம் - கொய்யா பழம்
நிறம் - கருநீலம்
ராகம் - பைரவி

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top