நவராத்திரி மகாலட்சுமி மற்றும் நவதுர்க்கை வழிபாடு

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நவராத்திரி மகாலட்சுமி மற்றும் நவதுர்க்கை வழிபாடு பற்றிய பதிவுகள் :

நவராத்திரியின் 4ம் நாளில் மகாலட்சுமிக்கு கருநீல நிறத்தில் அலங்காரம் செய்து வழிபட வேண்டும். நாமும் அதே நிறத்தில் ஆடை உடுத்தி வழிபடுவது சிறப்பு. 

என்ன பொருள் கொண்டு வழிபட்டாலும் நம்முடைய வழிபாட்டினை ஏற்றுக் கொண்டு அருள் செய்வாள். மிக எளிமையாக துளசி இலை, கற்கண்டு மட்டும் படைத்து கூட வழிபட்டாலும் மகாலட்சுமி மனம் மகிழ்வாள்.

நவதுர்க்கை வழிபாடு :

துர்க்கை வடிவம் - கூஷ்மாண்டா தேவி
மலர் - வெள்ளை நிற மலர்கள்
நைவேத்தியம் - தயிர், பால்

கூஷ்மாண்டா தேவியை வழிபட்ட பிறகு சிவ பெருமானையும், பிரம்ம தேவரையும் வழிபட வேண்டும் என புராணங்கள் சொல்கின்றன. 

இவள் ஆரோக்கியம், மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றை தரக் கூடிய தேவி. இவளுக்காக பூசணிக்காய் படைத்து வழிபடும் பழக்கம் பலரிடமும் உண்டு. 

இவள் தர்மத்தையும், நீதியையும் வழங்கக் கூடியவள். இதனால் நம்முடைய நியாயமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் அதை நிறைவேற்றி வைப்பாள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top