மார்கழி மாதத்தில் செய்யக்கூடாத விஷயங்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மார்கழி மாதத்தில் செய்யக்கூடாத விஷயங்கள் பற்றிய பதிவுகள் :

மார்கழி மாதத்தில் எந்த விதமான சுபகாரியத்தையும் செய்யக்கூடாது. உதாரணமாக, திருமண வரன் பார்த்தல், திருமண முகூர்த்தம், நிச்சயதார்த்தம் செய்வது, கிரகப்பிரவேசம் போன்றவற்றைக் கூறலாம்.

மார்கழி மாதத்தில் விதை விதைக்கக் கூடாது. தட்ப வெப்ப நிலை காரணமாக, விதை சரியாக வளராது. மேலும், தை மாதம் அறுவடை நடக்கும் மாதம் என்பது குறிப்பித்தக்கது.

இரவு நேரத்தில் கோலம் போடக்கூடாது. மார்கழி மாதம் முழுவதுமே பெரும்பாலான வீட்டில் வாசலை அடைத்து அழஅழகான விதவிதமான கோலங்கள் போடுவார்கள். 

இருப்பினும் பலருக்கும் அதிகாலை எழுந்து கொள்வது கஷ்டமாக இருக்கும் என்று, இரவிலேயே கோலம் போட்டு விடுவார்கள். இதைத் தவிர்க்க வேண்டும்.

மார்கழியில் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதால், சூரிய உதயத்துக்குப் பின் தூங்கக் கூடாது.

வீடு சம்மந்தப்பட்ட எந்த விஷயத்தையும் மார்கழி மாதத்தில் செய்யக்கூடாது. 

இதில், அலுவலக கட்டிடம் மாறுவது, வாடகைக்கு வீடு மாறுவது, கிரகப்பிரவேசம் செய்த வீட்டில் குடி புகுவது உள்ளிட்ட அனைத்தும் அடங்கும்.

அசையா சொத்துகள் மட்டுமல்லாமல், வாகனங்கள் பதிவு செய்வதும் கூடாது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top