மார்கழி மாதத்தில் காலை நேர பனி அல்லது குளிர் பெரும்பாலும் எந்த உடல் நல பாதிப்பையும் ஏற்படுத்தாது.
அதுமட்டும் இல்லாமல் மார்கழி மாத அதிகாலை நேரத்தில் புதிய காற்றை சுவாசிக்கும் பொழுது உடல் ஆரோக்கியம் மேம்படும். இதனால் மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும்.
மார்கழி மாதம் முழுவதுமே, பெரும்பாலான கோவில்களில் காலை மற்றும் மாலை நேரத்தில் பஜனைகள் நடைபெறும்.
காலை எழுந்து குளித்துவிட்டு நாளைத் தொடங்குவது உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, அதிகாலை நேரத்தில் கோவில் பஜனைகளில் கலந்து கொள்வது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு, குறிப்பிட்ட மாதம் ஏழாவது மாதம், எட்டாம் மாதம், ஒன்பதாம் மாதம் என்பது மார்கழி மாதமாக இயற்கையாகவே வரும் பொழுது, அவரவர் வழக்கப்படி வளைகாப்பு மற்றும் சீமந்தத்தை நடத்தலாம்.
திருமணம் மார்கழி மாதம் செய்யப்படாது இருப்பினும், திருமணத்திற்கான ஜாதக பொருத்தம் போன்றவை மார்கழியில் பார்க்கலாம்.
வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்பில் கலந்து கொள்ளலாம். அதே போல, அன்று முழுவதும் கண் விழித்தால், மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.
ஆருத்ரா தரிசனத்தில் கலந்து கொண்டால், சிவனின் அருளால் ஜென்மாந்திர பாவங்கள் தீரும்.