மார்கழி மாத சிவராத்திரி

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மார்கழி மாத சிவராத்திரி பற்றிய பதிவுகள் :

மார்கழி மாதம் பல சிறப்புக்களை கொண்ட மாதம். குளிரான இந்த மாதம் சைவ மற்றும் வைணவ சமயங்களின் ஒற்றுமையை சொல்லும் மாதமாகவும், பக்திக்கு உரிய மாதமாகவும் உள்ளது. 

அந்த வகையில் டிசம்பர் 29 ம் தேதியான இன்று, மார்கழி மாத சிவராத்திரி ஆகும். 

பொதுவாகவே பிரதோஷம், சிவராத்திரி இவை இரண்டுமே சிவ வழிபாட்டிற்குரிய நாட்கள். இந்த நாட்களில் விரதம் இருந்து சிவ வழிபாடு செய்தால் பாவங்கள் தொலைவதுடன், இந்த பிறவியில் செய்த புண்ணியங்களுக்கான அத்தனை பலனையும் இந்த பிறவிலேயே அனுபவிக்க வழிவகுத்து கொடுக்கக் கூடியன.

நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கவும், வேண்டியவை அனைத்தையும் பெறவும் இந்த நாளில் சிவ வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

இன்று சிவனையும், சிவனின் வாகனமான நந்தியையும், சிவனின் இட பாகத்தில் நிறைந்திருக்கும் பார்வதி தேவியையும் வழிபடுவது கோடான கோடி பலன்களை அள்ளித்தரும். 

இந்த நாளில் சிவ மந்திரங்களை ஜபிப்பதும், சிவ பூஜை செய்வதும், கோவில்களில் நடக்கும் சிவ பூஜையில் கலந்து கொள்வது சிவ பெருமானின் பரிபூரண அருளை பெற்றுத் தரும்.

மங்கலமான மார்கழி மாதத்தில் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறும். இன்று சிவன் கோவிலுக்கு சென்று நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் சிவ பெருமானை தரிசனம் செய்ய, முப்பத்து முக்கோடி தேவர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும்.

இன்று சிவபுராணம், கோளறு பதிகம், திருநீற்றுப் பதிகம், திருவாசகம், லிங்க அஷ்டோத்திரம் போன்றவற்றை பாராயணம் செய்யலாம். 

எதுவும் முடியாதவர்கள் ஓம் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை, சிவ சிந்தனையும் மனதார சொல்லலாம். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top