தோஷம் என்பது நமது கர்ம வினைப்பயனை பொறுத்து அமையும். அதாவது சென்ற ஜென்மத்தில் தங்கள் கணவன் அல்லது மனைவியை ஒழுங்காக நடத்தாதவர்களுக்கு தான் இந்த தோஷம் உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
நாம் செய்யும் பாவ புண்ணியத்தை சரி செய்ய இத்தகைய தோஷங்கள் நம் ராசியில் சஞ்சரிக்கிறது.
இந்த தோஷம் உடைய ராசியில் பிறந்தவர்கள் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும் என்பது நீதி.
செவ்வாய் என்பது யார் ? . அவர் எதற்காக ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கிறார், என்பது பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் அடுத்த பதிப்பில் பதிவிடுகிறோம்.
தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்வதன் மூலம் அந்த தோஷத்தில் இருந்து முழுமையாக வெளியேற முடியாது. இருப்பினும் அதன் தாக்கத்தில் இருந்து சிறு புல் அளவு விடுபட உதவும். அதுவும் குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே.
ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் இடமும் பலனும்
1. செவ்வாய் முதல் கட்டத்தில் வரும் போது திருமணத்தில் சண்டை சச்சரவுகளையும், வன்முறைகளையும் ஏற்படும்.
2. செவ்வாய் இரண்டாம் கட்டத்தில் வரும் போது திருமணம் மற்றும் சொந்த வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு, அந்த நபரின் குடும்பம் பாதிக்கப்படும்.
3. செவ்வாய் நான்காம் கட்டத்தில் வரும் போது, தொழில் ரீதியான வாழ்க்கையில் பெரும் தோல்வியை சந்திப்பார்கள். ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறிக்கொண்டே இருப்பார்கள்.
4. செவ்வாய் ஏழாம் கட்டத்தில் வரும் போது, அந்த நபரிடம் இருக்கும் அளவுக்கு அதிகமான ஆற்றல் திறன் அவரை கடும் கோபக்காரராக வைத்திருக்கும். அவருடைய ஆளுமை குணத்தால் அவருடைய குடும்பத்தாருடன் அவருக்கு நல்லுறவு இருக்காது.
5. செவ்வாய் எட்டாம் கட்டத்தில் வரும் போது, தன் வீட்டு பெரியவர்களின் பகைக்கு ஆளாகி தந்தை வழி சொத்தை இழப்பார்கள்.
6. செவ்வாய் பத்தாம் கட்டத்தில் வரும் போது, அந்த நபர் மனநிலை பிரச்சனையால் அவதிப்படுவார். மேலும் எதிரிகளுடன் கூடிய நிதி சார்ந்த நஷ்டங்களை சந்திப்பார்.
பரிகாரம் :
அகத்தீஸ்வரர் ஆலய தீர்த்தத்தில் ஆடி மாதச் செவ்வாய்க் கிழமைகளில் நீராடி விரதம் இருப்போர் புத்திரதோஷம் நீங்கப் பெறுவர். செவ்வாய் தோஷம் நீங்கித் திருமணம் நடைபெறும்.
செவ்வாய்க்குரிய அதிதேவதையான முருகனை வழிபடுவது நல்லது.
ஆதரவற்றோர் மற்றும் ஏழைகளுக்கு தானம் கொடுப்பது நல்லது.
செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து செவ்வாய் பகவானுக்கு விளக்கேற்றுவது, சஷ்டி விரதம், கிருத்திகை விரதம் மேற் கொள்வது, தினமும் கந்தசஷ்டி கவசம் படிப்பதுநல்லது.