கோவில் என்பது மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற மூன்று விஷயத்தால் சிறப்பு பெறுகிறது.
மூர்த்தி என்பது மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் தெய்வத்தையும், தலம் என்பது தலவிருட்சத்தையும் (மரம்), தீர்த்தம் என்பது கோவில் குளத்தையும் குறிக்கும்.
கோவில் தோன்றுவதற்கு முன்பே அந்த மரம் இருந்ததால், அதனை தலவிருட்சம் என்று அழைக்கின்றனர்.
தீர்த்தம் என்பது கோவிலில் உள்ள குளத்தைக் குறிக்கும். இந்தக் குளத்தில் நீராடி கடவுளை வழிபட்டால் பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றிலுமே தெய்வசக்தி நிரம்பி இருப்பதால், இதுபோன்ற கோவில்களில் வழிபட்டால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.
குழந்தைப்பேறு இல்லாதவர்கள் தலவிருட்சத்தை தினமும் மூன்று முறை வலம் வந்து கடவுளை வழிபட புத்திர பாக்கியம் கிடைக்கும். விருட்சம் என்பது மரத்தைக் குறிக்கும். மரங்களிலும் கடவுள் தன்மை உண்டு என சொல்வதற்காகவும், அந்த மரத்தில் உள்ள மருத்துவ குணங்களை தலைமுறை தலைமுறையாக கொண்டு செல்வதற்காகவும் தலவிருட்சங்கள் அமைக்கப்பட்டன.
அரச மரம், ஆல மரம், புளிய மரம், வேப்ப மரம், வன்னி மரம், வில்வ மரம் போன்ற மரங்கள் கோவில்களில் காணப்படுகின்றன. ஒவ்வொரு மரத்திற்கும் தனிப்பட்ட மருத்துவகுணம் உண்டு. எனவே, இதை மக்களுக்கு உணர்த்தவே கோவில்களில் தலவிருட்சங்கள் அமைக்கப்பட்டன.