ஓவ்வொரு தமிழ்மாதம் தோறும் திரியோதசி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும்.
சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்ட தினம் சனிக்கிழமை என்பதால் இந்த சனி பிரதோஷம் மஹா பிரதோஷம் ஆகிறது.
இந்த பிரதோஷத்தில் ஈசனையும், சனீஸ்வரனையும் சேர்த்து வழிபடுவதால் இந்த பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு உண்டு.
ஒரு சனிப்பிரதோஷ விரதமானது, ஆயிரம் சாதாரண பிரதோஷ விரதத்திற்கு சமம்.
இந்தப் பிரதோஷ காலத்தில் நந்தியின் இரு கொம்புகளுக்கு மத்தியில் சிவலிங்கம் தெரியுமாறு நின்று வணங்கினால் சகல துன்பங்களும் நீங்கும் மற்றும் நம்மை தேடி வரும் தீய வினைகளும் அகலும்.
இந்த பிரதோஷ பூஜையில் கலந்து கொள்பவர்கள் தங்களால் இயன்ற வகையில் பிரதோஷ பூஜைக்கு தேவையான பொருட்களை தங்கள் கையால் வாங்கிக் கொடுப்பது சிறப்பு.
பிரதோஷ பூஜைக்கான முழு பொருட்களையும் வாங்கி தாமே முன்னின்று நடத்துவது மேலும் சிறப்பைத் தரும்.
மஹா பிரதோஷத்தில் ஈசனை வழிபடும்போது இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சனி பிரதோஷத்தில் செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பயனை கொடுக்கும்.
பிரதோஷ காலம் முதல் பிரதோஷ காலம் முடிவடையும் வரை ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்து கொண்ட இருக்க வேண்டும்.
நன்றி.
ஓம் நமசிவாய