ஹோரைகளில் ஒவ்வொரு ஹோரைக்கும் தனித்தனியாக பலன்கள் உள்ளன. அவற்றுக்கு என பல்வேறு பலன்களை தனித்தனியாக உணர்ந்து செய்ய வேண்டும்.
சூரிய ஹோரையின் பலன்கள்
சூரிய ஹோரை அசுப ஓரை என்றும், பாபகிரகமான சூரியனின் ஆதிக்கம் உள்ள காலம் என்றும் கூறப்பட்டுள்ளதால், அந்த ஹோரை உள்ள கால கட்டங்களில் சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
செவ்வாய் ஹோரையின் பலன்கள்
ஹோரைகளிலேயே மிகவும் மோசமான பலன்களை பாபகிரகமான செவ்வாயின் ஹோரை தருவதாக பயமுறுத்திக் கூறப்பட்டுள்ளது. செவ்வாய் ஹோரை இருக்கும் கால கட்டத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
சனி ஹோரையின் பலன்கள்
தீயவை யாவையும் தரவல்லது சனி ஹோரை ஆகும். பாபங்கள் செய்பவரை தண்டிப்பதற்காகவே படைக்கப்பட்டுள்ள சனீஸ்வரன் தண்டகாரகன் ஆவார். பாபகிரகமான சனி பகவான், நம்மை எப்போதும் கவனித்துக் கொண்டிருப்பார்.
சுக்கிர ஹோரையின் பலன்கள்
சுபங்கள் யாவையும் தரவல்லது ஆகும். புண்ணியங்கள் செய்தவரை வாழ வைத்து சுகமளித்து இன்பம் தரக்கூடியவர் சுக்கிரன் ஆவார். சுபகிரகமான சுக்கிரன் நமக்கு நல்லன எல்லாம் தருவதற்காக காத்துக் கொண்டிருப்பார்.
புதன் ஹோரையின் பலன்கள்
பூர்வ புண்ணியங்கள் நன்கு செய்து புகழுடன் வாழ விரும்புகின்ற மனிதர்களை கல்வியால் மேன்மைகள் பெற செய்கின்ற புதனின் ஹோரைக் காலம் கிடைப்பது அரிதாகும். சுபகாரியமான புதன் நமக்கு நல்லன எல்லாமும் தருவார்.
சந்திர ஹோரை
வளர்பிறை சந்திரன் சுபர் என்றும், தேய்பிறை சந்திரன் அசுபர் என்றும் கூறுவர். மனதுக்கு காரகன் ஆதலால் சந்திரஹோரையில் புத்தியை பயன்படுத்த வேண்டும். சந்திரஹோரையில் உடல் சம்பந்தமான நல்ல காரியங்களை செய்யலாம்.
குரு ஹோரையின் பலன்கள்
சுபகிரகமான குருவின் ஹோரையில் நல்லன எல்லாவற்றையும் செய்யலாம். ஒருவரது சகல வெற்றிகளும் குருவின் பார்வையால் கிடைக்கின்றன. குரு பார்க்க கோடி நன்மைகள் உண்டு என்பர். திருவருளை குருவருளே பெற்றுத்தருகிறது..