சக்தி பீடங்களில் காமரூபம் எனும் தலத்தில் உறையும் அஜாமுகீ தேவியானவள் நம் உடலின் தலைப்பகுதியில் உறைவதாக நூல்கள் கூறுகின்றன.
இதே போன்று வாரணாஸி எனும் தலத்தில் உறையும் அதர்வணீ தேவியானவள் நம் உடலின் முகவட்டத்தில் உறைகிறாள்.
நேபாலம் எனும் தலத்தில் உறையும் இலா தேவியானவள் நம் உடலின் வலது கண்ணில் உறைகிறாள்.
பெளண்ட்ரவர்த்தனம் எனும் தலத்தில் உறையும் ஈஸ்வரி தேவியானவள் நம் இடது கண்ணில் உறைகிறாள்.
புரஸ்திரகாஷ்மீரம் எனும் தலத்தில் உறையும் உக்ரா தேவியானவள் நம் வலது காதில் உறைகிறாள்.
கன்யாகுப்ஜம் எனும் தலத்தில் உறையும் ஊகாரோர்ஜ்வலா தேவியானவள் நம் இடது காதில் உறைகிறாள்.
பூர்ணாசலம் எனும் தலத்தில் உறையும் ருதுதாமா தேவியானவள் நம் மூக்கின் வலது மடிப்பில் உறைகிறாள்.
அற்புதாசலம் எனும் தலத்தில் உறையும் ரேணுகா தேவியானவள் நம் மூக்கின் இடது மடிப்பில் உறைகிறாள்.
ஆம்ராதகேச்வரம் எனும் தலத்தில் உறையும் லுதம்பரா தேவியானவள் நம் வலது
கன்னத்தில் உறைகிறாள்.
ஏகாம்பரம் எனும் தலத்தில் உறையும் லூஞ்சிகா தேவியானவள் நம் இடது கன்னத்தில் உறைகிறாள்.
த்ரிஸ்ரோதம் எனும் தலத்தில் உறையும் ரேவதி தேவியானவள் நம் மேல் உதட்டில் உறைகிறாள்.
காமகோடி எனும் தலத்தில் உறையும் சுஷ்கரேவ்தி தேவியானவள் நம் கீழ் உதட்டில் உறைகிறாள்.
கைலாஸம் எனும் தலத்தில் உறையும் அஸ்வினீ தேவியானவள் நம் மேற்பற்களில் உறைகிறாள்.
ப்ருகுநகரம் எனும் தலத்தில் உறையும் கராலி தீர்க்கஜிஹ்வா தேவியானவள் நம் கீழ்பற்களில் உறைகிறாள்.
கேதாரம் எனும் தலத்தில் உறையும் அஞ்சனாபாஞ்சனா தேவியானவள் நம் நாக்குநுனியில் உறைகிறாள்.
சந்த்ரபுஷ்கரணி எனும் தலத்தில் உறையும் த்வஜா தேவியானவள் நம் கழுத்தில்
உறைகிறாள்.
ஸ்ரீபுரம் எனும் தலத்தில் உறையும் பூதவிந்யாஸிநீ தேவியானவள் நம் வலது தோளில் உறைகிறாள்.
ஓங்காரம் எனும் தலத்தில் உறையும் கத்யோதினி தேவியானவள் நம் வலது முழங்கையில் உறைகிறாள்.
ஜாலந்தம் எனும் தலத்தில் உறையும் தூம்ராதேவியானவள் நம் வலது மணிக்கட்டில் உறைகிறாள்.
மாதவம் எனும் தலத்தில் உறையும் க்ருசோதசீ தேவியானவள் நம் வலது கைவிரல்களடியில் உறைகிறாள்.
குலாந்தகம் எனும் தலத்தில் உறையும் அனந்தசக்தி தேவியானவள் நம் வலது கை விரல்நுனிகளில் உறைகிறாள்.
தேவிகோடம் எனும் தலத்தில் உறையும் சூஷ்மா தேவியானவள் நம் இடது தோளில் உறைகிறாள்.
கோகர்ணம் எனும் தலத்தில் உறையும் சநிர்ஜரா தேவியானவள் நம் இடது முழங்கையில் உறைகிறாள்.
மாருதேஸ்வரம் எனும் தலத்தில் உறையும் போகதா தேவியானவள் நம் வலது மணிக்கட்டில் உறைகிறாள்.
அட்டஹாஸம் எனும் தலத்தில் உறையும் நிர்ஜரநதீ தேவியானவள் நம் இடது கைவிரல்களில் உறைகிறாள்.
விரஜா எனும் தலத்தில் உறையும் ப்ரபோநீ தேவியானவள் நம் இடது கைவிரல் நுனியில் உறைகிறாள்.
ராஜக்ருஹம் எனும் தலத்தில் உறையும் தாரிணி தேவியானவள் நம் வலது
தொடையின் மேற்பகுதியில் உறைகிறாள்.
மகாபதம் எனும் தலத்தில் உறையும் க்ரியா சரஸ்வதீ தேவியானவள் நம் வலது முழங்காலில் உறைகிறாள்.
கோலாபுரம் எனும் தலத்தில் உறையும் பஞ்சவக்த்ரா தேவியானவள் நம் வலது கணுக்காலில் உறைகிறாள்.
ஏலாபுரம் எனும் தலத்தில் உறையும் ஸ்ரீதனாக்யா தேவியானவள் நம் வலது கால் விரலடியில் உறைகிறாள்.
காலேச்வரம் எனும் தலத்தில் உறையும் நந்தசக்தி தேவியானவள் நம் வலது கால்விரல் நுனியில் உறைகிறாள்.
ஜயந்தி எனும் தலத்தில் உறையும் சரஸ்வதீ தேவியானவள் நம் இடது தொடையின் மேல் பகுதியில் உறைகிறாள்.
உஜ்ஜயினி எனும் தலத்தில் உறையும் நீலகண்ட சரஸ்வதீ தேவியானவள் நம் இடது முழங்காலில் உறைகிறாள்.
சித்ரா எனும் தலத்தில் உறையும் போகதாயிநீ தேவியானவள் நம் இடது கணுக்காலில் உறைகிறாள்.
க்ஷீரிகா எனும் தலத்தில் உறையும் ஸ்யாமளா தேவியானவள் நம் இடது கால் விரல் அடியில் உறைகிறாள்.
ஹஸ்தினாபுரம் எனும் தலத்தில் உறையும் நந்தசக்தி தேவியானவள் நம் இடது கால் விரல் நுனியில் உறைகிறாள்.
பட்டீசம் எனும் தலத்தில் உறையும் இச்சாசக்தி தேவியானவள் நம் வலது விலாப்புறம் உறைகிறாள்.
ப்ரயாகை எனும் தலத்தில் உறையும் அதபகோமலா தேவியானவள் நம் இடது விலாப்புறம் உறைகிறாள்.
சஷ்டீசம் எனும் தலத்தில் உறையும் சித்ஸ்யாமளா தேவியானவள் நம் முதுகில் உறைகிறாள்.
மாயாபுரி எனும் தலத்தில் உறையும் ரூபஸ்யாமளா தேவியானவள் நம் நாபியில் உறைகிறாள்.
ஜலேசம் எனும் தலத்தில் உறையும் வித்யாஸ்யாமளா தேவியானவள் நம் வயிற்றில் உறைகிறாள்.
மலயாசலம் எனும் தலத்தில் உறையும் தீபினீ தேவியானவள் நம் இதயத்தில் உறைகிறாள்.
ஸ்ரீசைலம் எனும் தலத்தில் உறையும் ரேசிகா தேவியானவள் நம் வலது தோள்பட்டையில் உறைகிறாள்.
மேரு பீடம் எனும் தலத்தில் உறையும் மோஹினி தேவியானவள் நம் பிடரியில் உறைகிறாள்.
கிரிவரம் எனும் தலத்தில் உறையும் நாராயணீ தேவியானவள் நம் இடது தோள்பட்டையில் உறைகிறாள்.
மாஹேந்த்ரம் எனும் தலத்தில் உறையும் மங்களகெளரீ தேவியானவள் நம் இதயம் முதல் வலது கை நுனிவிரல் வரை உறைகிறாள்.
வாமனம் எனும் தலத்தில் உறையும் பானுக்ரியா தேவியானவள் நம் இதயம் முதல் இடது கை நுனிவிரல் வரை உறைகிறாள்.
ஹிரண்யபுரம் எனும் தலத்தில் உறையும் ஸித்க்ரியா தேவியானவள் நம் இதயம் முதல் வலது கால் நுனிவரை உறைகிறாள்.
மஹாலக்ஷ்மிபுரம் எனும் தலத்தில் உறையும் ஆத்யானி தேவியானவள் நம் இதயம் முதல் இடதுகால்நுனிவிரல் வரை உறைகிறாள்.
ஒட்யாணாம் எனும் தலத்தில் உறையும் பந்தமோசனீ தேவியானவள் நம் இதயம் முதல் இன உறுப்பு வ்ரை உறைகிறாள்.
சாயாபீடம் எனும் தலத்தில் உறையும் மாயாமாலினீ தேவியானவள் நம் இதயத்திலிருந்து உச்சி வரை உறைகிறாள்.
காமாக்யா எனும் தலத்தில் தேவியானவள் நமது யோனிப்பீடத்தில் உறைகிறாள்.
அண்டத்திலுள்ளதே பிண்டத்தில் உள்ளது என்பது ஆன்றோர் வாக்கு. அதுபோலவே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள சக்தி பீடத் தலங்களில் உள்ள தேவியரே நம் உடலில் சூட்சுமமாக உறைகின்றனர்.
இப்படி உறைபவளை ரிஷிகள் ஞானக் கண்கொண்டு அறிந்து அதற்குரிய மந்திரத்தை ஜபித்து தரிசித்தனர். அதையே நமக்கும் இங்கு வழியாக காண்பித்துக் கொடுக்கின்றனர்.
எனவே, சக்தி பீடங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் அந்தந்த உடல் உறுப்பில் உறையும் மஹாசக்தியை தியானித்து வணங்கலாம். மஹாசக்தியின் பேரருளை பெறலாம்.
ஸ்ரீ குருப்யோ நமஹ
ஸ்ரீ மாத்ரே நமஹ.