ஆண்டின் தொடக்கத்திலேயே ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் உற்சாகத்தை அளிக்ககூடிய பொங்கல் மிகவும் பிடித்தமான பண்டிகையாகும்.
உழவு தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்த முன்னோர்கள் உழக்கு உதவும் சூரிய பகவானுக்கும், உழவுக்கு உதவும் மாடுகளுக்கு நன்றி சொல்வதற்காக பயன்படுத்திய அழகான அறுவடை திருநாளே பொங்கல்.
இந்தியாவின் தென் மாநிலங்களில் பொங்கல் பண்டிகையை ஒவ்வொரு விதமாக கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு பொங்கல் திருநாள் 14ஆம் தேதி அமைந்திருக்கிறது. பொங்கலுக்காக வீடு முழுவதையும் சுத்தம் செய்து வெள்ளை அடிப்பது வழக்கம்.
பொங்கல் வைக்க நல்ல நேரம்
14ஆம் தேதி சூரிய பொங்கல் வைப்பதாக இருந்தால் காலை 5 மணி முதல் 6 மணிக்குள் பொங்கல் வைத்து சூரிய உதயம் ஆகும் போது பொங்கலை நெய் வேத்தியம் செய்யலாம்.
சூரிய பொங்கல் நேரத்தை தவறவிடும் நபர்கள் காலை 6 மணிக்கு மேல் ஆரம்பித்து 8.50 மணிக்குள் பொங்கல் வைத்து படைத்துவிடுங்கள்.
காலையில் தாமதமாக எழுந்து இந்த இரண்டு நேரத்தையும் தவற விடுவோர் காலை 10.35 மணிக்கு பொங்கல் வைக்க ஆரம்பித்து 12 மணிக்குள் படையலிடுங்கள்.
பொங்கல் பண்டிகை முக்கியத்துவம்
ஒரு ஆண்டு பிறக்கிற போது நம் எல்லோருக்கும் அந்த ஆண்டு வளமாக மகிழ்ச்சியாக அமைவதற்காக தித்திப்புடன் பொங்கல் கொண்டாட ஆரம்பித்தனர்.
பானையில் பொங்கல் பொங்கினால் 365 நாட்களும் சிறப்பாக அமையும் என்பதை நம்பிக்கை. வீட்டுக்கு வெளியே முற்றத்தில் சுத்தம் செய்து விறகு அடுப்பில் பாரம்பரிய முறையில் பொங்கல் வைப்பது சிறப்பு.
இறைவனுக்கு படையிலிட்டு வழிபட்ட பிறகு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், வீட்டின் அருகே உள்ள அனைவருக்கும் பொங்கலை பரிமாறு அன்பை வெளிப்படுத்துங்கள்.
பொங்கல் பண்டிகை சிறப்பு
பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். எனவே தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலை முழு மனதோடு கொண்டாடி மகிழுங்கள்.
குலதெய்வத்தை வேண்டி சூரியனை பார்த்து பொங்கல் வைக்க ஆரம்பிக்கவும். பொங்கல் தெற்கு பக்கம் பொங்கினால் எதிரிகள், தேவையில்லாத தடைகள் அன்றோடு விலகும். அனைத்து திசைகளிலும் பொங்கல் ஒரே நேரத்தில் பொங்கினால் உங்களுடைய குடும்பத்திற்கு மேன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை.