பொதுவாகவே விளக்கு ஏற்றப்படும் இடத்தில் இருள் நீங்கி ஒளி தெரியும். அதுபோல வாழ்க்கையில் இருள் நீங்கி, இன்னல் நீங்கி ஏற்றம் பெறுவதற்கு கோயிலில் விளக்கு ஏற்றுவது நல்லது.
மோட்ச தீபம் என்றால் இறந்த மறைந்த முன்னோர்கள், மறைந்தாலும் நம்முடைய மனதில் மறவாமல் இருக்க கூடிய முன்னோர்கள் இறந்த திதியில் ஏற்றக்கூடிய ஒரு விளக்கு.
நிறைய பேர் ஆர்வமிகுதியில் உயிரிழந்தவர்களின் படத்திற்கு எல்லா நாட்களும் மோட்ச தீபம் ஏற்றுகின்றனர். மோட்ச தீபத்தை வீட்டில் ஏற்றுவதை விட கோயிலில் ஏற்றுவது சிறப்பு என சாஸ்திரங்கள் சொல்கின்றன. இதுகுறித்து மேலும் விரிவாக நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
மோட்ச தீபம் முக்கியத்துவம்
மோட்ச தீபம் முதன் முறையாக முன்னோரின் திதி வரக்கூடிய நாளில் ஏற்றவேண்டும். நாம் வயிற்றில் கருவாக உண்டாகும் போதே வாழ்க்கை விதி எழுதப்பட்டு விடும். எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் ஒரு சில தடைகளால் வாழ்க்கையில் முன்னேற்றம் தாமதம் ஆகும்.
அப்படியான தடைகளை, விதிகளை மாற்றுவதற்கு ஒரு சில திதிகள் உண்டு. முன்னோர்களின் இறந்த திதியை சரியாக கணக்கிட்டு விளக்கு ஏற்றினால் உங்களுடைய வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கும். ஒரு சில நாட்களிலேயே வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணரலாம்.
மோட்ச தீபம் ஏற்றும் நாள், நேரம்
உங்களுடைய பரம்பரை, தலைமுறையின் நன்மைக்காக மோட்ச தீபம் ஏற்றுங்கள். முன்னோரின் திதி தெரியவில்லை என்றால் சனிக்கிழமைகளில் மாலை நேரத்தில் மோட்ச தீபம் ஏற்றுங்கள்.
• முன்னோரின் திதி நாள்
• சனிக்கிழமை
• அஷ்டமி திதி
• நவமி திதி
• அமாவாசை திதி
• பிரதமை திதி
ஆகிய நாட்களில் மோட்ச தீபம் ஏற்றலாம்.
உங்களுடைய வீட்டில் ஏற்றுவதை விட கோயிலில் மோட்ச தீபம் ஏற்றுவது சிறப்பு. கடற்கரை, ஆலமரம், அரசமரம், வேப்பமரங்களின் அடியில் மோட்ச தீபம் ஏற்றி முன்னோர்களிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, நம்முடன் வாழ்ந்த பலரின் அருமை, பெருமை உயிருடன் இருக்கும் போது புரிவதில்லை. அவர்கள் அனைவருமே நம்முடைய நன்மைக்காக சிரமப்பட்டவர்கள்.
இதற்கு ஒரு சிறிய தீபம் ஏற்றினால் மோட்சம் கிடைக்கும். மோட்ச தீபம் தொடர்ந்து ஏற்றுவதால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள், தீய குணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகி நல்ல எண்ணங்கள் வார்க்கும்.