○ பொதுவாக, வில்வ மரத்தின் வாசனை, அதன் வேர்களில் உள்ள குளிர்ச்சி ஆகியவற்றுக்கு பாம்புகள் வரும். அதனாலேயும் பயப்படுவர்கள். ஆனால், வீட்டில் வில்வ மரத்தை வைத்துக் கொள்வது மிகவும் விசேஷம். தவ விருட்ஷோத பில்வ: என்று சூக்தத்தில், மகாலட்சுமி அந்த மரத்தில் நித்யவாசம் செய்வதாகச் சொல்கிறது.
○ எனவே, "யார் வீட்டில் சாஸ்திரங்களில் சொன்னபடி நியமத்துடன் வில்வ மரத்தை வளர்க்கிறார்களோ, அந்த வீட்டில் மகாலட்சுமி நித்ய வாசம் செய்வாள்."
○ தீட்டுடன் வில்வ மரத்தின் அருகில் செல்லக்கூடாது, தொடக்கூடாது. தீட்டு என்பது, பிறப்பு, இறப்பு, மற்றும் பெண்கள் வீட்டு விலக்காகும் நாட்கள். அந்த நாட்களில் வில்வ மரத்தின் அருகே போகக் கூடாது.
சிவனுக்கு உகந்தது வில்வம்
○ வில்வத்தில் மூன்று, ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்கள் உள்ளன. இதில் மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்து கிறோம். ஒவ்வொரு வில்வத்திலும் மும்மூர்த்திகள் நித்தியவாசம் செய்வதாக ஐதீகம்.
○ பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியன் உதயமாவதற்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம்.
○ வில்வத்துக்கு தோஷம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தின் மீது தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்.
○ தினமும் சிவனுக்கு வில்வம் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபடுவது வாழ்வில் சிறப்பினைத் தரும்.
○ வில்வங்களில் 21 வகைகள் உள்ளதாகவும், அவற்றில் மகா வில்வமும், அகண்ட வில்வமுமே மிக உயர்ந்தாக சொல்லப்படுகிறது.
○ தேவலோகத்தை சேர்ந்த பஞ்ச தருக்களான ஐந்து மரங்களுள் (பாதிரி, மா, வன்னி, மந்தாரை, வில்வம்) என்று வில்வம், லட்சுமி தேவியின் திருக்கரங்களிலிருந்து தோன்றியதாக வராக புராணம் கூறுகிறது.
○ வில்வ மரத்தை வழிபடுவதால் லட்சுமி தேவியின் பரிபூரணமான அருள் கிட்டும்.
○ வில்வ இலைகள் சிவன் எனவும், முட்கள் சக்தி எனவும் கிளைகளே வேதங்கள் என்றும் வேர்கள் யாவும் முக்கோடி தேவர்கள் என்றும் போற்றப்படுகிறது.
○ சிவ பூஜை சமயத்தில் வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் அகன்று தோஷங்கள் மறைந்து பகவான் ஈசனது அருட்பார்வை கிடைக்கும்.
○ ஒரு வில்வ தனத்தை சிவனுக்கு அர்ப்பணம் செய்வதால் மூன்று ஜென்ம பாவம் விலகும் என்கிறது.
○ இருபத்தோரு வில்வ வகைகளுள் மிகவும் சக்தி வாய்ந்த வகை. இதன் காய்கள் சற்றே ஆப்பிள் பழம் போன்று தோற்றம் அளிக்கும். இலைகளை சிவார்ச்சனைக்கு பயன்படுத்திக் காய்களை மகாலட்சுமி யாகத்திற்கு பயன்படுத்துவார்கள்.
○ மிகப்பெரிய யாகங்கள் நடக்கும் போது 108 ஓமப் பொருட்களில் வில்வப்பழமும் ஒன்றாகிறது.
○ வீட்டில் அகண்ட வில்வ மரம் வளர்த்து வந்தால் அது பெரிதாகி கனி கொடுத்த பிறகே பூஜை செய்த அதன் இலைகள் அருகதை உடையது. ஆனால் வளரும் செடியை பூஜை செய்வதால் அதுவரை குடும்பத்தில் துர் சக்திகள் விலகத்தொடங்கும். படிப்படியாக பொருட்சேர்க்கை ஏற்படும்.
வில்வம் வளர்த்தால் செல்வம் வளரும்
சமீப காலங்களில் வில்வத்தை வீட்டில் வளர்க்கக்கூடாது. சிவலிங்கம் வீட்டில் பூஜிக்கக்கூடாது என்று விரும்பியபடி
பேசி வருகின்றனர். வில்வ மரம் எங்கு வளர்க்கப்படுகிறதோ அங்கே மகாலட்சுமி நிரந்தரமாக வசிப்பாள்.
பார்ச்சூன் ட்ரீ எனப்படும் அதிர்ஷ்ட வில்வமரத்தை விதையிட்டு வளர்த்து பூஜை செய்வதால் கடன் தொல்லைகள் அகன்று செல்வம் அதிகமாகும்.
வளர்ப்பு முறையும் வழிபாடும்:
ஒரு பூத்தொட்டியில் பசும் சாணம் மண் கலந்து மூன்று நாட்கள் விதையை உள்ளே வைத்து அமாவாசை தினத்தில் எடுத்து ஈர மண்ணில் புதைக்க வேண்டும்.
45 நாட்கள் காத்திருந்தால் விதை முளைத்து வெளிவரும். விதை எல்லோரும் போடலாம். சிலருக்கே அது முளைக்கும் யோகம் வரும். விதை முளைத்து வந்ததும் உரமிட்டு வளர்த்து பௌர்ணமி, வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி துதி கூறி கற்கண்டு,தேங்காய், பழம், தாம்பூலம் வைத்து வழிபடலாம். வில்வ விருட்சம் முன் அமர்ந்து விநாயகரை வணங்கினால் வளமே பெருகும்