அஷ்டவராகி அம்மன் வழிபாடு

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அஷ்டவராகி அம்மன் வழிபாடு பற்றிய பதிவுகள் :

சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன். மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். 

ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். இந்தியாவில் வராஹிஅம்மனுக்கு இரு இடங்களில் தான் ஆலயம் உள்ளது.

ஸ்ரீ வாராஹி தாயே சரணம்!

அவளுக்கு சதுரங்க சேனா நாயிகா என்றொரு திருநாமம் உண்டு. அதாவது அம்பிகையின் நால்வகைப் படைகளுக்கும் சேனாதிபதியாகத் திகழ்பவள் என்று அர்த்தம். இவளை, தண்டினி என்றும் சொல்வர். சப்த மாதர்களில் ஒருவரான இவள்...ஸ்ரீவாராஹி! சிறந்த வரப்பிரசாதி.

நம் மனத்துள் எண்ணத்தைக் காரியமாக மாற்றும் சக்திதான், ஸ்ரீவாராஹி தேவி. 

ஆடி மாதத்தில் ஸ்ரீவாராஹியை வழிபடுவது சிறப்பு. இந்த மாதத்தில், ஆஷ்ட நவராத்திரி நாட்களிலும் ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஸ்ரீவாராஹிதேவிக்கு சர்க்கரைப் பொங்கல், உளுந்து சாதம், வடை, தயிர்சாதம் என இவற்றில் ஒன்றைக் கொண்டு நைவேத்தியம் செய்து (பால் சாதம், திலா அன்னம், எள்ளுருண்டை நைவேத்தியமும் செய்யலாம்), மல்லி, முல்லை, நீலசங்கு புஷ்பம், கருந்துளசி, வில்வம், மருக்கொழுந்து, செந்தாமரை, வெண்தாமரை ஆகிய பூக்களால் அர்ச்சித்து வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் பெறலாம்.

ஸ்ரீவாராஹிக்கு உகந்த சிவப்பு, நீலம் மற்றும் பச்சை புடவையைச் சார்த்தி வழிபடுவது, கூடுதல் பலனைத் தரும்.

எட்டு வராகிகள் :

1. மஹா வராகி, 

2. ஆதி வராகி, 

3. ஸ்வப்னவராகி, 

4. லகு வராகி, 

5. உன்மத்த வராகி, 

6. சிம்ஹாருடா வராகி, 

7. மகிஷாருடா வராகி, 

8. அச்வாருடா வராகி 

என்போர் எட்டு வராகிகள் (அஷ்டவராகி) என்று அழைக்கப்படுகிறார்கள்.

கோயில்கள் :

1. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலாமேடு எனும் ஊரில் அஷ்டவராகி கோயில் உள்ளது. இக்கோயில் உலகிலேயே வராகியம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோயிலாகக் கருதப்படுகிறது. 

2. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வழுவூர் வீரட்டேசுவரர் கோயில் வராகி வழிபட்ட தலமாக அறியப்படுகிறது. 

3. கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் எனும் ஊரில் சப்தமாதாக்கள் (செல்லியம்மன் எனும் பெயரில்) கோவில் உள்ளது. இங்கு வராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியில் பூஜை மற்றும் மஹா யாகம் நடைபெறும்.

4. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திற்கு அருகில் உள்ள என்.சுப்புலாபுரம் (எ) நரிப்பட்டி என்ற ஊரில் வாரஹி அம்மன் கோவில் உள்ளது

தமிழகத்தில் சிவாலயங்கள் பலவற்றிலும் சப்தமாதர்களுக்கு சந்நிதிகள் உள்ளன. குறிப்பாக, தஞ்சாவூர் பெரியகோயில் முதலான சில ஆலயங்களில், ஸ்ரீவாராஹி தேவிக்கு தனியே சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top