சிவனின் மகனாக கருதப்படும் பைரவர் 8 வடிவங்களில் அருள் செய்கிறார். இவர்களை அஷ்ட பைரவர்கள் என அழைக்கிறோம். காசி நகரின் காவல் தெய்வமாக விளங்குபவர் இவர் தான்.
கால பைரவரின் அனுமதி இருந்தால் மட்டுமே காசி நகருக்கு சென்று விஸ்வநாதரை நம்மால் தரிசிக்க முடியும் என சொல்வார்கள். காசி நகரத்தை எட்டு திசைகளிலும் இருந்து காவல் காப்பவர் இவர் தான்.
கால பைரவரை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேய்பிறை அஷ்டமி திதி ஆகியவை ஆகும். இந்த நாளில் கால பைரவர் கோவில் அல்லது சிவன் கோவில்களில் உள்ள பைரவர் அல்லது கால பைரவர் சன்னதிக்கு சென்று வழிபட பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
கால பைரவருக்கு செளமுக விளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் உகந்ததாகும். செளமுக விளக்கு என்பது நான்கு புறமும் தீபம் கொண்ட விளக்காகும். இதில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். மிளகு சேர்த்த உளுந்த வடை, தயிர் சாதம் ஆகியவற்றை கால பைரவருக்கு நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.
கால பைரவரை செவ்வரளி மலர் சூட்டி வழிபட வழிபட வேண்டும்.
அனைத்து விதமான பயங்களையும் போக்கக் கூடியவர் கால பைரவர். இவர் தீமைகளை அழித்து, நன்மைகளை வழங்கக் கூடியவர் ஆவார். கால பைரவாஷ்டகம் சொல்லி வழிபடுபவர்கள் செய்வினை கோளாறுகளில் இருந்து விடுபடுவார்கள். நோய்கள் தீரும்.
வட மாநிலங்கள் சிலவற்றில் கால பைரவருக்கு மனுபானம் படைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. கால பைரவருக்கு மதுபானம் படைத்து வழிபட்டால் வாழ்வில் ஏற்றம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
பில்லி, சூனியம், மாந்ரீகம் போன்ற தீய சக்திகளால் பாதிக்கட்டவர்கள், தீராத கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், தொழில் வீழ்ச்சி, பொருளாதார சிக்கலில் சிக்கி தவிப்பவர்கள், நவகிரக தோஷங்கள், சனியின் பிடியில் சிக்கி சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருபவர்கள், எதிரிகள் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கால பைரவர் வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்வது சிறப்பானதாகும்.