ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமி விரதம் சக்தி வழிபாட்டிற்கு உகந்ததாக அமைந்திருக்கும். ஆனால் வைகாசி, தை, பங்குனி, சித்திரை, கார்த்திகை ஆகிய மாதங்கள் முருகனுக்குரிய வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட விரதங்கள் கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.
அப்படி தை மாதத்தில் பூசம் நட்சத்திரமும், பெளர்ணமி இணைந்து வரும் நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு தைப்பூசம் பிப்ரவரி 11ம் தேதி செவ்வாய்கிழமை வருகிறது. பிப்ரவரி 10ம் தேதி இரவு 06:00 மணி துவங்கி, பிப்ரவரி 11ம் தேதி இரவு 06:34 வரை பூசம் நட்சத்திரம் இருந்தாலும் பெளர்ணமி திதி, பிப்ரவரி 11ம் தேதி இரவு 06:55 மணிக்கு தான் துவங்குகிறது.
பிப்ரவரி 12 ம் தேதி பெளர்ணமி திதி இருந்தாலும், அன்றைய தினம் பூசம் நட்சத்திரம் கிடையாது. இதனால் எந்த நாளை தைப்பூசமாக கருதி வழிபட வேண்டும்? எந்த நாளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு, அவரது அருளை பெற வேண்டும் என்ற குழப்பம் பக்தர்களிடம் ஏற்பட்டுள்ளது. இதற்கு சரியான விளக்கத்தை நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தைப்பூசம் என்பது நட்சத்திரத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும் ஒரு விரதமாகும். அதன்படி பூச நட்சத்திரத்தை தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் பிப்ரவரி 11ம் தேதியை தான் தைப்பூச நாளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அது மட்டுமின்றி இரவு 06:55 மணிக்கு பிறகு தான் பெளர்ணமி திதி துவங்குவதால், அன்று மாலை முதலே பெளர்ணமி திதி இருப்பதாக தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதனால் பெளர்ணமி, பூசம் நட்சத்திரம் இரண்டு இருக்கும் நாளாக பிப்ரவரி 11ம் தேதி தான் அன்றைய தினம் தான் விரதம் இருக்க வேண்டும்.
அதாவது பிப்ரவரி 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களில் எந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டாலும் அதற்கு மிகப் பெரிய பலன் உண்டு.
காரணம் 1 :
பிப்ரவரி 10ம் தேதி பிரதோஷ விரதம்.
காரணம் 2 :
பிப்ரவரி 11ம் தேதி தைப்பூச விரதம்.
காரணம் 3 :
பிப்ரவரி 12ம் தேதி பெளர்ணமி விரதம்.
அதனால் இந்த மூன்று நாட்களுமே சிறப்பு வாய்ந்தவையாகும். முருகனுக்கு தைப்பூச விரதம் இருக்க வேண்டும் என்பவர்கள், ஒரு நாள் தைப்பூசம் விரதம் இருப்பவர்கள் பிப்ரவரி 11ம் தேதி காலை துவங்கி, மாலையில் விரதத்தை நிறைவு செய்து விடலாம்.