மாசி மாத ஏகாதசி விரதம் - ஆம்லகி ஏகாதசி

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மாசி மாத ஏகாதசி விரதம் பற்றிய பதிவுகள் :

மாசி மாதத்தில் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை இரண்டிலுமே வரும் ஏகாதசி மிகவும் தனித்துவமானவை. இந்த ஏகாதசியில் விரதமிருந்தால் திருமாலின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். வாழும் போதே துன்பங்கள் இன்றி, இன்பமான வாழ்க்கை வாழ வழி செய்யும். மாசி மாதம் வளர்பிறையில் வரும் ஆம்லகி ஏகாதசி செல்வ வளத்தையும், வெற்றிகளையும் தரக் கூடியது.

பொதுவாக ஏகாதசி விரதம் என்பது புண்ணியத்தை தந்து, வைகுண்ட பதவியை தரக்கூடிய அற்புதமான விரதம் என்பார்கள். அதிலும் புண்ணிய மாதமாக போற்றப்படும் மாசி மாதத்தில் வரும் ஏகாதசி கூடுதல் சிறப்பு வாய்ந்தது. மாசி மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசியில் விரதம் இருந்தால் அன்னப்பசி தீரும். வளர்பிறையில் வரும் ஏகாதசியில் விரதம் இருந்தால் கடன் தொல்லை, வறுமை நீங்கும்.

மாசி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசியை ஆமலாகி ஏகாதசி என்கிறோம். இந்த ஏகாதசியில் விரதம் இருந்து, நெல்லி மரத்திற்கு பூஜை செய்து வழிபட்டால் மஹாலட்சுமியின் அருள் கிடைக்கும். இதனால் வீட்டில் உள்ள பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி, செல்வ செழிப்பு ஏற்படும்.

ஆம்லகி ஏகாதசி :

2025 ம் ஆண்டில் மாசி மாத வளர்பிறை ஏகாதசியான ஆமலாகி ஏகாதசி மார்ச் 10 ம் தேதி வருகிறது. ஆனால் மார்ச் 09 ம் தேதி காலை 07.45 மணிக்கே ஏகாதசி திதி துவங்கி, மார்ச் 10 ம் தேதி காலை 07.44 மணிக்கு ஏகாதசி முடிந்து விடுகிறது. அதற்கு பிறகு துவாதசி திதி துவங்கி விடுகிறது. 

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசி திதி துவங்கியதும் விரதத்தை துவங்கி, துவாதசியில் விரதத்தை முடிக்க வேண்டும் என்பது நியதி. மார்சச் 09 ம் தேதியே ஏகாதசி திதி துவங்கி விடுவதால் ஏகாதசி விரதத்தை மார்ச் 09 ம் தேதி துவங்க வேண்டுமா அல்லது மார்ச் 10 ம் தேதி துவங்க வேண்டும் என்ற குழப்பம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. இதை நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் குமரி பஞ்சாங்கம் மூலம் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.

எப்போது விரதத்தை துவங்கி, எப்போது முடிக்க வேண்டும்?

பொதுவாக சூரிய உதய நேரத்தின் போது இருக்கும் திதியே அன்றைய நாளுக்கான திதி என கணக்கிடப்படுகிறது. அதன் அடிப்படையில் பார்த்தால் மார்ச் 09 ம் தேதி சூரிய உதய நேரத்தில் தசமி திதியே உள்ளது. இதனால் இந்த நாளில் ஏகாதசி விரதத்தை துவங்க முடியாது. மார்ச் 10 ம் தேதி சூரிய உதய நேரத்தின் போது தான் ஏகாதசி திதி உள்ளது. இதனால் இந்த நாளை தான் ஏகாதசி விரத நாளாக கணக்கில் கொள்ள வேண்டும்.

ஆம்லகி ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மார்ச் 09 ம் தேதி பகல் பொழுதில் எளிமையான உணவினை எடுத்துத் துவங்கி விடலாம். இரவும் எளிமையான உணவை எடுத்துக் கொண்டு, மார்ச் 10 ம் தேதி அதிகாலை ஏகாதசி விரதத்தை துவங்கி விட வேண்டும். அன்று நாள் முழுவதும் உபவாசம் இருந்து பெருமாளை வழிபட வேண்டும். மார்ச் 10 ம் தேதி காலை 06.30 மணி முதல் 07.45 மணிக்கும் பாராயணம் செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top