சித்திரை மாதத்தில் மிக முக்கியமான விழாக்களில் ஒன்று மதுரை சித்திரை திருவிழா. இது சைவ - வைணவ ஒற்றுமையின் வெளிப்பாடாக கொண்டாடப்படும் உற்சவம் ஆகும். 16 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் இவ்விழாவில் மிக முக்கியமான நிகழ்வுகள் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும்.
மதுரை சித்திரைத் திருவிழாவின் வரலாறு
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது.
பாண்டிய மன்னர்கள் காலத்திலிருந்தே சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் திருமணம், தமிழ்நாட்டின் கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாகும்.
மதுரை சித்திரைத் திருவிழா 2025 அட்டவணை :
• ஏப்ரல் 29 - சித்திரை திருவிழா கொடியேற்றம்
• மே 06 - மீனாட்சி பட்டாபிஷேகம்
• மே 08 - மீனாட்சி திருக்கல்யாணம்
• மே 09 - மீனாட்சி திருத்தேரோட்டம்
• மே 10 - கள்ளழகர் புறப்பாடு
• மே 11 - கள்ளழகர் எதிர்சேவை
• மே 12 - கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்
சித்திரைத் திருவிழாவின் போது பதினாகாவது மற்றும் இறுதி நாளில் தேவேந்திர பூஜை நடத்தப்படும். இது மண் செழிப்பதற்காக நடத்தப்படும் மிக அற்புதமான பூஜை ஆகும். கள்ளழகர், அழகர்மலை சென்றடைவதுடன் மதுரை சித்திரை திருவிழா நிறைவு பெறும்.