ருத்ராட்சம் 
சிவபெருமான் கண்களை விழித்து1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில்இருந்து தோன்றியதே ருத்ராட்ஷம்.

ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார். சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா?...

அதனால்யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாக ருத்ராட்ஷத்தை அணிய வேண்டும். ருத்ராட்ஷதை அணிந்த பின் எந்தசூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது. நீங்கள் இப்பொழுதுஎப்படி வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றீர்களோஅதேபோல் அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்விதமாற்றத்தையும் செய்யத் தேவையில்லை.

நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய சொல்லி வந்தாலே போதுமானது.
நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு, புலால் உணவு உண்பவர்கள், கணவன் - மனைவி இல்லற தாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாமா?
முக்கியமாக இவ் விஷயங்கள் அனைத்தும் இயற்கையானது. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானது கிடையாது. நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்கள் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார்.

இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இந்நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியலாம். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.

சரி ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டேன், இதன்பலன்கள் தான் என்ன?
நிராடும் போது ருத்ராட்ஷம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம்அனைவருக்கும் தெரியும்.

பாவங்களினால் தான் நமக்குக்கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்ஷம் அணிவதால் கொடியபாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும்.

மேலும் ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகல விதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு பகவானின் பேரின்பமும், ஆனந்தமும் கிடைக்கும் என்று சிவ மஹா புராணம் அறுதியிட்டுக் கூறுவதையும் கருத்தில் கொள்க.

இது மட்டுமல்ல ருத்ராட்ஷம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்ஷத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது.

திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிந்து தினந்தோறும் 108முறை எழுத்தாலோ மனதலோ பஞ்சாட்சரத்தை சொல்லி வந்தால் 18 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும்.

ருத்ராட்ஷம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா?
சர்வ நிச்சயமாக, அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அவர் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும். அப்படியிருக்க அவர் ருத்ராட்ஷத்தையே நமக்கு அளித்துள்ளாரே அதனால் திருநீறு தரித்தல், ருத்ராட்ஷம் அணிதல், பஞ்சாட்சரமந்திரமான "ஓம் நமசிவாய" உச்சரித்தல், இம்மூன்றும் ஒருசேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை அடைவீர்.

இம்மூன்றும் சனாதன தர்மங்கள், தர்மத்தை விடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார். மேலும் நவகிரஹங்கள் நன்மையே செய்யும், (ஏழரைச் சனி,அஷ்டமச்சனி, ராகு-கேது) தோஷத்தின் தாக்கங்கள் குறையும்.

ருத்ராட்ஷம் அணிந்திருக்கும் வேலையில் உயிர் பிரிந்தால் சிவபெருமான் திருவடியை அடைந்து நற்கதி எற்படும். பேய், பிசாசு, பில்லி, சூனியம், மந்திரம், தந்திரம், இவை அனைத்தும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பவர்களை ஒன்றுமே செய்ய முடியாது.

ஆகையால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.

ஒருவர் ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து புன்னியம் செய்திருந்தால்  மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்ஷம் அணியும் மஹாபாக்கியம் கிடைக்கும்,.

இத்தனை மேன்மைகள் இருந்தும் சிலர் திருநீறு, ருத்ராட்ஷம் அணியத் தயங்குகிறார்களே?
உலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அவர்களின் மதசின்னங்களை அணிய வெட்கப்படுவதில்லை. நாம் நமதுமதச் சின்னங்களாகிய விபூதி, ருத்ராட்ஷம் மற்றும் நமசிவாய என்ற ஜபம் ஆகியனவற்றை ஏன் விட வேண்டும் இதற்காக யாராவது நம்மைக் கேலி பேசினாலும் பொருட்படுத்தக்கூடாது.

ருத்ராட்ஷத்தை அணிந்து நமசிவாய என்று எல்லாக்காலத்திலும் சொல்லிக் கொண்டிருப்பவர்களசிவபெருமான் நிச்சயம் காப்பாற்றுவார். அவரவர், தங்கள் வாழ்க்கையிலேயே இதை அனுபவப் பூர்வமாக உணரலாம். ருத்ராட்ஷம் அணிபவர்கள் கண்டிப்பாக எந்தசூழ்நிலையிலும், ருத்ராட்ஷதைக் கழற்றவே கூடாது. யார்என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம். சிவபெருமானின் அனுக்கிரஹமும், ஆசீர்வாதமும் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு ருத்ராட்ஷம் கிடைக்கும். இப்பேற்பட்ட மஹிமை பொருந்திய ருத்திராக்ஷத்தை நாம் எப்போதும் அணிந்து நற்பயன் அடைவோம்.

ஓம் நமசிவாய

Tags :

Rutrasham, Rutrasham History , rutrasam , rutram , maalai

Post a Comment

Previous Post Next Post