ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வழிபடலாம அல்லது கூடாத

0
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வழிபடலாம அல்லது கூடாத என்பதை பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் சிறு பதிவுகள் :


ஆஞ்சநேயர் என்பவர் சிவபெருமானின் மறு அவதாரமாவார். மார்கண்டேயனைப் போல இவரும் ஒரு சிரஞ்சீவி ஆவார்.

இந்த உலகில் ராம நாமத்தை விட சிறந்தது எதுவும் இல்லை என்று உலகிற்கு உணர்த்தியவர் ஸ்ரீ ஆஞ்சநேயர்.

இவர் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயு பகவானின் மகன்.

தனி ஒருவராக சஞ்சீவி என்னும் மலையையே பெயர்த்து எடுத்தவர்.

ஸ்ரீ  ராம நாமத்தை சாட்சியாக வைத்து கொடுத்த வாக்கிற்காக, ஸ்ரீ ராமரையே எதிர்க்கும் பலம் கொண்டவர்.

ஸ்ரீ ராமரின் உயிர்த் தோழன்.

இத்தகைய பெருமைகளை கொண்ட ஒரு கடவுளை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடுவதில் எந்த ஒரு பாதிப்பும் கிடையாது.

வீட்டில் ஆஞ்சனேயர் உருவப்படம் வைத்து வழிபடுபவர்களாக இருந்தால் பஞ்சமுக அனுமன் திருஉருவப்படத்தை மட்டுமே வைத்து வழிபட வேண்டும். காரணம் உக்ரமான தெய்வங்கள் பட்டியலில் இவரும் ஒருவர்.

ஸ்ரீ  ராமர் இருக்கும் இடத்தில் எப்போதும் அனுமான் இருப்பார் , இதனால் தான் வீடுகளில் அனுமான் படம் இருக்கும் போது ஸ்ரீ ராமர் படமும் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

ஜாதகத்தில் சனி பார்வை உள்ளவர்கள் ஆஞ்சனேயரை வழிபட்டால் சனியின் தாக்கத்திலிருந்து சிறிது விடுபடலாம்.

ஸ்ரீ ராம ஜெயம். ஜெய் ஸ்ரீ ராம் 

நன்றி

ஓம் நமசிவாய

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top