சரஸ்வதி பூஜை முறைகள்

1
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சரஸ்வதி பூஜை பற்றிய பதிவுகள் :



நவராத்திரியின் இறுதி நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த பூஜையை இரவு நேரத்தில் பூஜித்து வழிபடுவதே சிறந்தது. இந்த 8 நாட்களும் விரதமிருந்து பூஜித்து வழிபடுவது இறுதி நாளாகிய சரஸ்வதி பூஜை அன்று நிறைவேறும் என்பது ஐதீகம்.

புராணங்கள் அடிப்படையில் மகிஷாசுரன் என்ற அசுரனிடமிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக மூன்று தேவியர்களும் ஒன்பது நாட்கள் தவமிருந்து இறுதியில் மூவரும் இணைந்து ஒரே தேவியாக உருவெடுத்து மகிஷாசுரன் என்ற அசுரனை அழித்து மகிஷாசுரமர்த்தினியாக காட்சியளித்தனர். இதனையே நவராத்திரி நமக்கு உணர்த்துகிறது.

இந்த போருக்கு பயன்படுத்திய ஆயுதங்களை போற்றும் வகையில் ஆயுத பூஜையானது கொண்டாடப்படுகிறது. இந்த போரில் வெற்றி பெற்ற நாளையே விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது.

சரஸ்வதி பூஜை வழிபடும் முறை :

முதலில் வீட்டை கங்கை நீரால் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வீட்டில் முன் பகுதியில் தாமரைப் பூ போன்ற மாக்கோலம் போடப்பட வேண்டும். பின் வீட்டில் தோரணம் கட்டி பூஜையறையை அலங்கரித்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

சூரிய அஸ்தமனத்திற்கு பின் நமது பூஜையை வீட்டில் துவங்க வேண்டும். அதாவது 6 மணிக்கு பின். காலையில் வீட்டின் அருகிலுள்ள ஆலயம் மற்றும் நமது குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு.

முதலில் அனைத்து கடவுள் திருவுருவ படத்திற்கும் மலர்மாலை அறிவித்தது சந்தனம், குங்குமம் அணிவிக்க வேண்டும். ( நமது முன்னோர்களின் திருவுருவ படத்திற்கும் சேர்த்து.)

பின் விநாயகர், குலதெய்வம், சரஸ்வதி, விஸ்வகர்மா மற்றும் வீட்டில் அமைத்துள்ள பிற தெய்வங்களுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு வாழை இலையை வைத்து அவல், பொரி, தேங்காய், வாழைப்பழம் போன்ற பூஜைப் பொருட்களை பரிமாறவும். ( குறிப்பாக தனியாக ஒரு இடத்தில் நம் முன்னோர்களுக்கும் தனித்தனி வாழையிலையில் பூஜைப் பொருட்களை பரிமாறவும். )

இங்கு சரஸ்வதியின் அருகில் கல்வி மற்றும் இறை வழிபாடு சார்ந்த புத்தகங்களையும், விஸ்வகர்மாவின் பக்கத்தில் நமது தொழில் சார்ந்த கருவிகளையும் வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூஜை செய்ய வேண்டும்.

பின் சர்க்கரை பொங்கல், கடலை போன்ற நெய்வேத்யங்கள் சாத்தி இறைவனுக்கு தூப தீபம் காட்டி நமக்கு தெரிந்த மந்திரங்களை ஓதியும், கடவுள் பக்தி பாடல்களைப் பாடியும் மற்றும் 16 பேறுகளையும் வேண்டியும் இறைவனை தியானிக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு :

இந்த பூஜைக்கு பயன்படுத்திய புத்தகம் மற்றும் பேனா போன்ற பொருள்களை பூஜை முடிந்த உடனே எடுத்து பயன்படுத்த வேண்டும். உடனே பயன்படுத்துவதே சிறப்பு. மேலும் அன்று புத்தகம் மற்றும் பேனா போன்ற பொருள்களை பிறருக்கும் தானம் செய்ய வேண்டும்.

நன்றி.

ஓம் நமசிவாய
_______________________________

Post a Comment

1 Comments
Post a Comment
To Top