ஶ்ரீராஜமாதங்கி நவராத்திரி வைபவம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஶ்ரீராஜமாதங்கி நவராத்திரி வைபவம் பற்றிய பதிவுகள் :

காஞ்சியில் காமாட்சி தவிர அம்பிகை எவ்விதமான சந்நிதியிலும் விளங்குவதில்லை என்பது தெரிந்த விஷயமே .. #காயாரோகணம் ஶ்ரீ நீலாயதாக்ஷியும் தானே அப்பெரும் க்ஷேத்ரத்தின் ஏக நாயகியாக விளங்குவதோடு தன்னை அன்றி அங்கே வேறேதும் சக்தி ரூபமில்லாதவாளாய் ஆதிமூல தேவதையாய் நிற்கிறாள்...மாமதுராபுரி மீனாக்ஷியும் நாகைக்காரோணம் நீலாயதாக்ஷியும் ஷாட்ஷாத் ஶ்ரீ மாதங்கி ரூபத்தினவர்களே... மீனாள் மதங்க புத்திரியாதலால் பசும்பச்சையாகவும் , நீலாள் சியாமளையாக வெளிர் நீலப்பச்சையாகவும் ஜ்வலிப்பவள்... இருவரும் ஒருவயிற்று பெண்பிள்ளைகள் போலவே...  

ராஜசியாமளை நீலா இயல்பாகவே , இசைப்ரியை , சாமகானப்ரியை , எனவேதான் சங்கீத மூர்த்திகள் உளமார்ந்த இன்னிசைக்கு, ஷாட்ஷாத் பராபட்டாரிகை ராஜராஜேஸ்வரியாக பஞ்சபிரம்மாசனத்தில் பிரத்யக்ஷமாக கண்ணெதிரே எழுந்தருளி காட்சி கொடுத்தாள்..

கடந்த சில ஆண்டுகள் வரையில் சியாமளா பூஜா பத்தாதியின் படியே சகல பூஜாபச்சாரங்கள் இந்த கருந்தடங்கண்ணிக்கு நடைபெற்றன ..

தனிக்கோஷ்டத்தில் நித்திய கன்னியாக விளங்குபவளே நீலா.. ராஜமாதங்கி ரூபத்தில் சிவனை சற்றே பின்தள்ளி முன்னே நிற்பாள்...

இவளுடைய நவரத்தின சுவர்ணாபரணங்களை மீனாக்ஷிக்கு சாத்துபடி செய்வதும் மீனாவின் ஆபரணங்கள் நீலாவுக்கு வருவதும் பழங்காலத்தில் நடந்திருப்பதாக கூற்றுள்ளது...

சிவனோடு சம்பந்தப்படாமல் சந்நிதியில் பாலா லீலா வினோதினியாக திகழும் இக்கன்னிகை பற்பல விளையாடல்கள் புரிந்திருக்கிறாள் ...

சிக்கல் நாயகனுக்கு நிஜத்தில் நீலாவே வெற்றிவேல் தந்தவள்.. அக்காலத்தில் பாதயாத்திரை சென்று அவ்வேல் வழங்கப்படும் .. தற்போது அவ்விழா திரிந்து விட்டது ..
தீர்த்தாமாடும்போது கூட தங்க கவசத்தை கழற்றாத செல்வச்சீமாட்டிப்பெண் லீலா.. இவள் பாலகுமாரியாக அருள்வதனால் , ஆடிப்பூரம் யௌவன வைபவம் வெகுசிறப்பு..

அவ்வேளையில் , எண்ணெய் காப்பு சாற்றுதல் முடித்து தூய வெண்ணிற வஸ்திரம் சாற்றப்பட்ட பின் , அலங்காரம் கழைந்து அபிஷேகம் நடக்கும் வேளையில் , அம்பிகையின் வெண்பட்டு யௌவன தீட்டு உண்டாகி இருப்பது இன்றுவரை நடப்பது கண்கண்ட அதிசயமே ... அதன்பின் அம்மனுக்கு ஏற்றியிறங்கும் சடங்கு செய்து சுத்திகரண பூஜைகள் நடக்கும் ... உற்சவ நீலாயதாட்சி தீர்த்தமாட புறப்பாடு காண்பாள்...

சுட்டித்தனத்தில் கைதேர்ந்த நீலாவை , சங்கீத மும்மூர்த்திகள் மூவரும் பாடிக்கசிந்து உருகியுள்ளனர்.. இவள் சந்நிதியில் நடக்கும் பஞ்சாயத்து குற்றங்கள் தெரிவிக்கப்பட்ட பின் , அந்திப்பொழுதில் சகஸ்ரநாமம் பாராயணம் அஷ்டதிக் திசைகளில் தீக்ஷிதர் நின்று ஓதுவார் .. ஒவ்வொருவரின் கனவிலும் பிரச்சினை பற்றிய துணுக்குகள் தந்து செல்வாள் ..இந்த நீலசரஸ்வதி நீலாம்பிகை ..

நன்றி - ஸ்ரீபாலா சத்சங்கம், செம்பாக்கம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top