சிறப்பு வாய்ந்த சிவாலயங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிறப்பு வாய்ந்த சிவாலயங்கள் பற்றிய பதிவுகள் :

பெரியகோயில் என்று சொல்வதற்குக் காரணம்:

1. பெரிய நிலப்பரப்பு
2. வானளாவிய கோபுரங்கள்
3. பெரிய திருச்சுற்றுக்கள்
4. பெரிய மதில்கள்
5. பெரிய திருக்குளங்கள்
6. உயர்ந்த பெரிய வாயில்கள்
7. உட்கோயில்களும் பெரிய அமைப்பினை உடையன
8. பெரிய திருஉருவங்கள்
9. பெரிய வாகனங்கள்
10. பெரிய திருவிழாக்கள்

பெரிய சிவன் கோயில்கள்

1. தில்லைத் திருக்கோயில்
2. மதுரை சுந்தரேசுவரர் கோயில்
3. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்
4. இராமேசுவரம் இராமநாதர் கோயில்
5. திருவானைக்கா ஜம்புகேசுவர்ர் கோயில்
6. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
7. கும்பகோணம் கும்பேசுவரர் கோயில்
8. தஞ்சை பிரகதீசுவரர் கோயில்
9. சீர்காழி பிரமபுரீசுவரர் கோயில்
10. திருவையாறு ஐயாறப்பர் கோயில்
11. திருவாரூர் வன்மீகநாதர் கோயில்
12. திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் கோயில்.

மதுரை ஆலயம்

இருபத்தைந்து மகேசுவர மூர்த்தங்களை ஒரு சேரக் காணக் கூடிய இடமாக மதுரை ஆலயம் மட்டுமே உள்ளது எனலாம். மதுரை சொக்கநாதர் திருமுன்புள்ள நந்தி மண்டபத்தைச் சுற்றிலும் உள்ள பெருந்தூண்களில் இவ்விருபத்தைந்து திருவுருவங்களும் அமைந்துள்ளன.

மலைக்கோவில்கள்

பொதுவாக மலைக்கோவில்கள் முருகனுக்கும் திருமாலுக்கும் தான் உண்டு. ஆனால் திருக்கழுக்குன்றம், திருச்செங்கோடு, திருக்காளத்தி, மகாதேவமலை ஆகியவைகள் எல்லாம் சிவபெருமானுக்குரிய கோவில்கள். விநாயகருக்குத் திருச்சி மலைக் கோட்டையில் உச்சிப்பிள்ளையார் எனும் திருநாமம் உண்டு.

விமானத்தில் அறுபத்து மூவர்

தஞ்சை மாவட்ட தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில் விமானத்தைச் சுற்றிலும் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றுப் பகுதிகள் சிற்பமாக அமைந்துள்ளன.

வைப்புக் கோயில்

தேவாரப் பதிகம் பெறாமல் தேவாரம் பாடிய எவராலும் பதிகம் பாடிப் போற்றப் பெறாமல் தேவாரப் பாசுரங்களில் பாட்டுக்களின் பெயர் மட்டுமே குறிக்கப் பெற்ற தலங்கள் ஆகும். வைப்புத் தலக்கோயில்கள் 280 உள்ளன.
பாடல் பெற்ற கோயில்கள்
அப்பர் சம்பந்தர், சுந்தரர் தனித்தோ இணைந்தோ பதிகம் பாடிய கோயில்கள் பாடல் பெற்ற கோயில்கள் இவை தேவாரம் பெற்ற கோயில்கள் என்பர். இவற்றின் எண்ணிக்கை 247. திருப்புகழ் பாடல் பெற்ற திருக்கோயில்கள் 106.
கோயில்.

இந்தியாவிலேயே கோயில்கள் தமிழ்நாட்டில்தான் மிகுதி மொத்தக் கோயில்கள் 24,605 (சிவனுக்கு 10,033 பெருமாளுக்கு 4,226, இதர 10.346.

கொடி மரம், நந்தி, பலி பீடம் இல்லை

திருப் பெருந்துறை ஆவுடையார் கோயிலில் ஏனைய சிவாயங்களைப் போல் கொடிமரம், நந்தி, பலி பீடம் இல்லை, இதற்குரிய காரணம் இது. யோகசித்தியால் அகங்கார மகாரங்கள் பலியாகி, பசுபோதமும் விலகியபக்குவ ஆன் மாக்கள் முத்திபேறு பெறுவதற்கான அத்வைதத் தலம் திருப்பெருந்துறை.

சிற்பிகள் உறுதி மொழி

கோயில் திருப்பணி செய்யும் சிற்பாசாரி யர்கள் வேலை ஒப்பந்தம் செய்யும் போது ஆவுடையார் கோயில் சிற்ப வேலைகள் புற நீங்கலாக எனக் குறிப்பிடுவர். ஏனெனில் திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் சிற்பங்களுக்கு நிகராக வேறு எங்கும் இல்லை.

லிங்கத்தின் பின்னால் சிவன்

திருவீழிமிழலையில் நேத்திரார்ப்பணேசுவர சுவாமி லிங்கத் திருமேனியின் பின்னால் பார்வதி பரமேச்வர்ர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்கள். சாதாரணமாக சிவாலயக் கருவறையில் காணமுடியாத சிறப்பு இது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top