சிவ வழிபாடு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவ வழிபாடு பற்றிய பதிவுகள் :

தேவர்கள் சிவலிங்க வழிபாடு செய்வதற்காகவே விசுவ கர்மாவிடம் பற்பல சாந்தித்யங்களோடு கூடிய சிவலிங்கங்களைப் பெற்றனர். 

அவை :

அசுவினி தேவர்கள் - மண்ணாலான லிங்கம்
இந்திரன் - பதுமராக லிங்கம்
எமதர்மன் - கோமேதக லிங்கம்
சந்திரன் - முத்து லிங்கம்
சரஸ்வதி - சொர்ண லிங்கம்
வருணன் - நீல லிங்கம்
வாயுதேவன் - பித்தளை லிங்கம்
விஷ்ணு - இந்திர லிங்கம்
நாகர்கள் - பவள லிங்கம்
பிரம்மன் - சொர்ண லிங்கம்
ருத்திரர்கள் - திருவெண்ணீற்று லிங்கம்
குபேரன் - சொர்ண லிங்கம்
மகாலட்சுமி - நெய்யினாலான லிங்கம்

மாத பவுர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் சிவபூஜை செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடையலாம்.

சித்திரை-மரிக்கொழுந்து. 
வைகாசி-சந்தனம், 
ஆனி-முக்கனிகள், 
ஆடி-பால், 
ஆவணி-நாட்டுச்சர்க்கரை, 
புரட்டாசி- அப்பம்,
ஐப்பசி-அன்னம், 
கார்த்திகை-தீபவரிசை, 
மார்கழி-நெய், 
தை-கருப்பஞ்சாறு, 
மாசி-நெய்யில் நனைந்த கம்பளம்,
பங்குனி-கெட்டித்தயிர்

சிவாலய பிரதட்சிண பலன்கள்:

நந்தியையும் பலிபீடத்தையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டும். அதனால் கிடைக்கும் பலன்கள் வருமாறு:

3 முறை செய்தால் - நினைத்தது நடக்கும்.
5 முறை செய்தால் - வெற்றி உண்டாகும்.
7 முறை செய்தால் - நல்ல குணம் ஏற்படும்.
9 முறை செய்தால் - குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
11 முறை செய்தால் - நீண்ட ஆயுள் கிடைக்கும்.
13 முறை செய்தால் - வேண்டுதல் நிறைவேறும்.
15 முறை செய்தால் - செல்வம் கிடைக்கும்.
17 முறை செய்தால் - செல்வம் பெருகும்.
108 முறை செய்தால் - அஸ்வமேத யாகப் பலன்.
1008 முறை செய்தால் -ஒருவருட தீட்சை யாகப்பலன்

சிவலிங்க பூஜையால் நன்மை அடைந்தவர்கள்:

1. வெள்ளை யானை, சிலந்தி, பாம்பு, முக்தி நிலை பெற்றன-ஸ்ரீகாளஹஸ்தி இராகு, கேது கிரகங்கள்.

2. கண்ணப்பார் முக்தி அடைந்தார்-ஸ்ரீ காளஹஸ்தி.

3. மார்க்கண்டேயர் நீண்ட ஆயுளைப் பெற்றார்-திருக்கடையூர்.

4. அம்பிகை வழிபட்ட தலம் - காஞ்சிபுரம்.

5. விநாயகர் வழிபட்ட தலம் - திருச்செங்கோடு.

6. முருகன் வழிபட்ட தலம் - திருமுருகன் பூண்டி.

7. திருமால் வழிபட்ட தலம் - திருவீழிமிழலை.

8. பிரம்மன் வழிபட்ட தலம் - சீர்காழி.9. இந்திரன் வழிபட்ட தலம் - மதுரை.

10. யானை வழிபட்ட தலம் - திருவானைக்காவல்.

11. எறும்பு வழிபட்ட தலம் - திருவெறும்பூர்.

12. பார்வதிதேவி மயிலாக வழிபட்ட தலம் - மயிலாப்பூர்.

ஊமத்தம் பூ பூஜை:

எல்லோராலும் ஏற்கப்படாத ஊமத்தம் பூவை தனது பூஜைக்கு உகந்ததாகக் கொள்ளும் கருணைக்கடல் சிவபெருமான் ஆவார். அதிலும் குறிப்பாக ஸ்ரீ அக்னீஸ்வரரை ஊமத்தம் பூ கொண்டு வழிபடுகிறவர்களுக்கு மனக்கவலைகள் தீரும். பில்லி, சூனியங்கள் அகலும். சித்தம் தெளியும்.

சிவலிங்க தத்துவம்:

சிவலிங்கத்தின் அடிப்பாகம் பிரம்ம பாகமாகும். இது, மனிதனின் உயிர் மூச்சுக்குரியது. நடுப்பாகம் மனிதனின் தசை, ரத்தம் ஆகியவற்றிற்கு பாதுகாப்பானது. மேல்பாகம் மனிதனின் எலும்பு, நரம்பு ஆகியவற்றை குறிக்கிறது.இப்படிப்பட்ட சிவலிங்கத்தை பூஜை செய்தால் மும்மூர்த்திகளை பூஜை செய்த பலனை பெறலாம்.

சிவன் கோவில் திசைகளின் பலன்கள்:

வடகிழக்கு பார்வை - வாதநோய் தீரும்
தெற்கு பார்வை - அகால மரணம் நீங்கும்.
மேற்கு பார்வை - திருமண தடை நீங்கும், பிரிந்த தம்பதிகள் சேரும்.வடமேற்கு - பொன்னும்,பொருளும் சேரும்
தென்மேற்கு - தெய்வீக அருள் உண்டாகும்
வடக்கு - வேலை வெற்றியடையும்.

எந்தெந்த கிழமையில் என்னென்ன நைவேத்யம்?

ஞாயிறு-சர்க்கரைப்பொங்கல்
திங்கள்-பால் (அ)தயிர் அன்னம்
செவ்வாய்-வெண்பொங்கல்
புதன்-கதம்பசாதம்
வியாழன்-சித்ரான்னம்
வெள்ளி-பால் பாயசம்
சனி-புளிசாதம், 

சிவபூஜைக்கு கத்தரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம்.சிவபூஜைக்கு பின்னர் இருபது சிவபக்தர்களுக்கு அன்னம் அளிப்பது மிகவும் விசேஷம். 108 ருத்ர காயத்ரி ஜபிப்பது விசேஷம்.

சிவபெருமான் ஆடிய 7 வகை தாண்டவங்களும் அவை ஆடப்பட்ட இடங்களும் வருமாறு:

1. படைத்தல் செயலாகிய காளிகா தாண்டவம் (திருவாலங்காடு)
2. காத்தலுக்குரிய கவுரி தாண்டவம் (திருப்பத்தூர்)
3. காத்தல் செயலுக்கு சந்தியா தாண்டவம் (மதுரை)
4. அழித்தலுக்குரிய சங்கார தாண்டவம் (ஆதாரமில்லை)
5. மறைத்தலுக்கு திரிபுர தாண்டவம் (குற்றாலம்)
6. அருளலுக்கு ஊர்த்தவ தாண்டவம் (திருநெல்வேலி)
7. ஐந்தொழிலுக்கு ஆனந்த தாண்டவம் (சிதம்பரம)

பஞ்சபூத தலங்கள்:

1. காஞ்சீபுரம் - பிருத்வி (நிலம்)மூலாதாரம்
2. திருவானைக்காவல் - அப்பு (நீர்)சுவாதிஷ்டானம்
3. திருவண்ணாமலை - தேயு (தீ)மணிபூராகம்
4. காளஹஸ்தி - வாயு (காற்று)அனாகதம்
5. சிதம்பரம் - ஆகாயம் (வான்)விசுத்தி.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top