காளி தேவியை அகோரிகள் வணங்குவதற்கான காரணங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து காளி தேவியை அகோரிகள் வணங்குவதற்கான காரணங்கள் பற்றிய பதிவுகள் :

நம் மதத்தில் உள்ள மிகவும் கடுஞ்சினம்
கொண்ட கடவுளாக கருதப்படுபவர் காளிதேவி. அவருடைய கருமையான சருமம், கடுஞ்சினம் கொண்ட பார்வை, பயமுறுத்தும் நாக்கு, இரத்த சிவப்பினாலான கண்கள் போதும், நம்மை அப்படியே உறைய வைக்க. ஆனாலும் புராணத்தின் படி, மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக பார்க்கப்படுகிறார் இவர்.

அகோரிகளும், சித்தர்களும் சிவபெருமானுடன் சேர்த்து காளி தேவியையும் தங்களின் முக்கிய கடவுளாக வணங்குகின்றனர்.

இந்தியாவில் உள்ள அனைத்து அகோரிகளும் தங்களின் தலைமை தெய்வத்தை "அன்னை
(மாதா)" என்றார் கூறுகின்றனர். 

அதற்கு காளி தேவி என்று தான் பொருள் தரும். நம் அனைவரிடமும் உள்ள ஆதி நிலை ஆற்றல் திறன் அல்லது சக்தியின் காட்டுத்தனமான மற்றும் ஒழுங்கற்ற உள்ளடக்கத்தை தான் காளி குறிக்கிறார். தன் கணவனான சிவபெருமானின் மேல் நிற்பதை போல் தான் இவர் வடிவமைக்கப்பட்டுள்ளார். 

ஆணின் ஆற்றல் திறன் அடக்கமாகவும் இணங்கிப் போகிறவாறும் இருக்கையில், பெண்ணின் ஆற்றல் திறன் முனைப்புடனும், ஆளுமையுடனும் இருக்கும் என்ற அகோரிகளின் நம்பிக்கைக்கு ஏற்ப காளி தேவியின் உருவம் தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

காளி தேவியையும் சிவபெருமானையும் வணங்கிட வழக்கத்திற்கு மாறான சடங்குகள் பல தேவைப்படும். அண்டசராசர சக்தி மற்றும் பிரபஞ்சத்தின் முழுமையாக பார்க்கப்படுகிறார் காளி தேவி. படைத்தலுக்கு வழி கொடுக்கும் அழிக்கும் கடவுளாவார் இவர். அதனால் எதிர்பதமான ஜோடிகள் அனைத்தையும் பொருந்தும் படியானதாக பார்க்கப்படுகிறது.

இந்த உலகத்தில் எதுவுமே அசுத்தம் இல்லை என அகோரிகள் நம்புகிறனர். அனைத்தும்
சிவபெருமானிடம் இருந்தும் அவருடைய பெண் வெளிப்படுத்துதலான காளியிடம் இருந்தும் வந்து, மீண்டும் அவர்களிடமே செல்கிறது. அதனால் இந்த உலகத்தில் உள்ள அனைத்துமே சுத்தமானவை.

பெண்கள் அனைவரும் பெண்மையின் தோற்றம் என்ற விதியை உடைத்தெறிந்து, சக்தி மற்றும் வலிமையின் அருமையான தோற்றத்தை வெளிப்படுத்துபவர் காளி தேவி. தூய்மையான வீர பெண்ணான அவர், ஆண்களுக்கு இணையாக சண்டை போட்டு அவர்களை போர் களத்தில் வெல்லக்கூடியவர். இவர் "கால்" எனப்படும் காலத்தை அழிக்கக்கூடியவர். 

நேரம் என்ற கருத்தமைவிற்கும் அப்பாற்ப்பட்டவர் இவர் என்பதை இது குறிக்கிறது. சிவபெருமான் அல்லது மஹாகாலாவை (அழிப்பவர் அல்லது அவரின் பெண்
வெளிப்பாடு - இறப்பின் கடவுளான சக்தி
அல்லது காளி) வணங்குவார்கள் அகோரிகள்.

இறைச்சி, மதுபானம் மற்றும் காமம் ஆகிய மூன்றும் மற்ற சாதுக்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அகோரிகளுக்கோ இந்த உலகமே நடைமுறைப்படி வேறுபட்டதாகும். மாமிசம் சாப்பிடுவது அனைத்தையும் சாப்பிடுவதற்கு இணையாகும். அனைத்தும் ஒன்று என்பதால் வரம்பு என்பதே கிடையாது. 

அனைத்தையும் உண்ணுவதால், அனைத்திலேயும் உள்ள ஒருமையைப் பற்றியும், வித்தியாசப்படுத்துதலை நீக்குவதை பற்றியும், அவர்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கும். அதனால் மலம், மனித திரவங்கள் மற்றும் மனித மாமிசத்தை அவர்கள் உட்கொள்கிறார்கள். 

இதுப்போக சில இறந்த சடலத்துடன் உடலுறவு கொள்ளும் பழக்கத்தையும் சில அகோரிகள்
கொண்டுள்ளனர். அவர்கள் மதுபானமும் குடிப்பார்கள். பூஜை நேரத்தில் அதனை கடவுள்களுக்கும் படைப்பார்கள்.

10 மகாவித்யாக்களில் (அறிவு கடவுள்) ஒருவரான காளி அல்லது தாராவால் தான் தெய்வீக சக்திகளுடன் அகோரிகளுக்கு அருளளிக்க முடியும். தூமாவதி, பகளாமுகி மற்றும் பைரவி ஆகிய வடிவங்களில் இந்த
கடவுளை வணங்குகின்றனர். 

மஹா காலபைரவர் மற்றும் வீரபத்திரர் போன்ற கடுஞ்சின வடிவத்திலான சிவபெருமானையும் இவர்கள் வழிபடுகிறார்கள். அகோரிகளின் ராட்சச கடவுளாக விளங்குபவர் ஹிங்லஜ் மாதா.

இந்த பிரபஞ்சத்தை செயல்பட வைக்கும் ஒரே வடிவிலான ஆற்றல் திறன் தான் சக்தி தேவி என சமயத்திருநூல்கள் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு வருகிறது. இந்த ஆற்றல் திறன் பெண்மையின் வடிவமாகும். இது துர்கை, சதி அல்லது பார்வதி வடிவில் அவதரித்து வரும்.

அதன் பின் தன் ஆண் துணையான சிவபெருமானுடன் இணைந்து படைத்தலுக்கான வழியை ஏற்படுத்தி கொடுப்பார். காளி என்ற வார்த்தை "கால்" என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து எடுக்கப்பட்டவை. அது காலத்தை குறிக்கும். காலத்தில் இருந்து யாருமே தப்ப முடியாது. தேவியின் அனைத்து வடிவங்களையும் விட காளி தேவி வடிவம் தான் இரக்க குணமுள்ளவர். 

அதற்கு காரணம் தன் குழந்தைகளுக்கு மோட்சம் அல்லது விடுதலையை கொடுப்பவர் இவரே. அழிக்கும் கடவுளான சிவபெருமானின் துணை இவர்.

உண்மையற்றதை அழிப்பவர்கள் இவர்கள். மனிதனிடம் மையமாகும் (சக்கரங்கள்) நுண்ணியம் வாய்ந்த வலிமையை தூய்மையாக்கும் மற்றும் தெய்வீக ஆற்றல்
திறன் குண்டலினியை (முதுகெலும்பின் அடிப்பகுதியான மூலாதார சக்கரத்தில் செயலற்று இருக்கும்) விழிக்க வைக்கும் ஆன்மீக முயற்சியை குறிக்கிறது காளி சாதனா.

குண்டலினி சக்தியை விழிக்க வைப்பது காளியின் முக்கியமான அம்சங்களில் ஒன்றை‌ குறிக்கிறது. அதனால் சுத்தமான தெய்வீகத்தை உணர தீவிரமான காளி சாதனாவை நோக்கி போவார்கள் அகோரிகள். காளி! இந்தப் பெயரைச் சொன்ன உடனே, பயங்கரமான உருவமும், பயமும் மனதில் தோன்றுவது உண்டு. "அவளா… அவ ஒரு காளி ஆத்தா!" என்று சிலரை பற்றிக் கூறுவதுண்டு.

ஏதோ ஒரு பொல்லாத்தனத்தைப் பார்த்து இப்படிச் சொல்வர். காளி படம் வீட்டில் வைக்கலாமா, பூஜை செய்யலாமா என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்பி விடுவர்.

ஆனால், "காளி" என்பவள், அனுக்கிரக தெய்வம். காளியை உபாசிக்க ஆரம்பித்த பின், நாளடைவில் பயம் நீங்கி, அவளிடம் ஈடுபாடு ஏற்படும். காளி என்பவள் அம்பிகையின் ஒரு தோற்றம்; துஷ்டர்களை நிக்ரகம் செய்வதற்காக எடுத்த அவதாரம். இவளைப் பார்த்து, பயப்பட வேண்டியதில்லை பக்தர்கள். "அறியக் கூடியவள் நான், அறிய முடியாதவள் நான், ஞானமும், அஞ்ஞானமும் நான், பிறப்பும், பிறப்பில்லாததும் நான், கீழும், மேலும் நான், சகலமும் நான்…" என்கிறாள் காளி. உண்மையை மறைத்துக் காட்டுகிறாள். 

உண்மையைப் புரிந்து கொண்டால் ஸ்வரூபத்தைக் காணலாம். காளியின் இருப்பிடம் மயானம். பேதங்கள் ஒழிந்து, அகங்காரம் அழிந்து, பஞ்ச பூதங்களோடு மனித சரீரம் லயமாகி விடுகிற நிச்சலமான இடம். "ஆடிப் பாடி மகிழ்ந்த போது, என்னை நீ மறந்திருந்தாலும், நான் உன்னை மறக்காமல், உனக்காக உன்னை எதிர்பார்த்து இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன். உன் கடைசி
காலத்திலாவது, என் அருள் உனக்கு கிடைக்கும். நான் உலகத்தின் உயிர் தத்துவம்.

உலகினின்று நான் பிரிந்தால், உலகம் சவமாகிக் கிடக்கும். "இதை விளக்கத் தான், நான், சிவ ரூபமான சவத்தின் மேல் காலடி வைத்திருக்கும் தோற்றம். ஞானம், விஞ்ஞானம் எல்லாமே என் விரிந்த கூந்தலில் அடக்கம். நாக்கை அடக்கினால் யாவும் வசப்படும். அதனால், நாக்கைத் தொங்கவிட்டு இதை விளக்குகிறேன்.

சரீரத்தில் தலையே பிரதானம். அதுவே, ஞான சக்தி நிலையம். இந்த நிலையத்தில் உள்ளது எதுவோ அதுவே பிரும்மாண்டத்தில் உள்ளது" என்கிறார். "பிரமாண்டத்தைப் படைத்து, காத்து, அழிப்பவள் அவளே. சங்கல்ப மாத்திரத்தில் விளையாட்டாகவே செய்யக் கூடியவள். இந்த பிரும்மாண்டங்களையே முண்ட மாலையாக தரித்திருக்கிறாள். ஒரு கரத்தில் கொடுவாள்.

அஞ்ஞானத்தை வெட்டித் தள்ளும் சாதனம். கீழே தொங்கும் தலை, விஷ வாசனைகளிலிருந்து அம்பிகையால் விடுவிக்கப்பட்ட ஜீவனின் இறுதித் தோற்றம். வர, அபய முத்திரை, பக்தர்கள் வேண்டுவதை அளித்து அபயம் தருவது. ஆடை அணியாதவள் காளி. ஜீவன் அஞ்ஞானத்தால் மூடப்பட்டுள்ளது. அஞ்ஞானம் விலகினால், ஜீவப்ரகாசம் புலனாகும் என்பதை, ஆடை
இல்லாமலிருப்பது விளக்குகிறது. பராசக்தி சிரிக்கிறாள்; அட்டகாசமாகச் சிரிக்கிறாள். "வாழ்வில் சிரித்திரு, துன்பம் கண்டு நடுங்காதே’ என்கிறாள். வாழ்வின் உல்லாசமே சிரிப்பாக மலர்கிறது. 

இப்படிப்பட்ட அம்பிகையை வழிபட்டு, அவள் அருளாலே சம்சாரமாகிய கடலை கடக்கலாம் என்கின்றனர். காளியை வழிபட, பலவித பூஜா முறைகள் சொல்லப்பட்டுள்ளன. இது தவிர, காளியின் அருள் பெற, அவளது நாமாவளிகளைச் சொன்னாலே போதும். ஸ்தோத்ர, அர்ச்சனைகளால் அவள் பிரீதியடைகிறாள்.

காளி கவசம், காளி கீலக ஸ்தோத்ரம் என்று பல ஸ்தோத்ரங்கள் உள்ளன. முறையாக வழிபட்டால், காளியின் அருள் பெற்று, சகல பாக்கியங்களையும் பெறலாம். "காளி… காளி…’ என்று பயந்து ஒதுங்கிப் போக வேண்டாம். நன்மை செய்யத்தான் தெய்வங்கள் உள்ளன; யாரையும் கெடுப்பதற்கல்ல!

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top