பிரத்யங்கிரா தேவி வழிபாடு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பிரத்யங்கிரா தேவி வழிபாடு பற்றிய பதிவுகள் :

சகலமும் அருளும் இந்த தேவியின் சொரூபத்தை மிக அருமையாக விவரிக்கின்றன ஞான நூல்கள். ஸ்ரீபிரத்யங்கிராதேவி ஓங்காரம் எனும் பிரணவ ரூபிணியாக விஸ்வரூபம் கொண்டவள்.

ஸ்ரீபிரத்யங்கிராதேவி மகா பைரவ பூஜிதா என வணங்கப்படும் சக்தியின் அம்சம். இவளை விரதம் இருந்து வழிபட்டால், எண்ணியது ஈடேறும்; எல்லா நற்காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள். அதேநேரம் அதர்மத்துக்கு ஒருபோதும் துணைபோக மாட்டாள் இந்த சக்தி.

சகலமும் அருளும் இந்த தேவியின் சொரூபத்தை மிக அருமையாக விவரிக்கின்றன ஞான நூல்கள். ஸ்ரீபிரத்யங்கிராதேவி ஓங்காரம் எனும் பிரணவ ரூபிணியாக விஸ்வரூபம் கொண்டவள்.

ஒவ்வொன்றிலும் முக்கண்கள் கொண்ட ஆயிரம் சிம்ம முகங்கள், விரிந்த கூந்தல், ஆயிரம் திருக்கரங்களுடன் ராஜசிம்ம வாகனத்தில் வீற்றிருப்பாள். சூலம், முண்டம், சர்ப்பம், பாசம், டமருகம் முதலானவற்றை திருக்கரங்களில் கொண்டு காட்சியளிப்பாள் என்கின்றன புராணங்கள். வேறுசில நூல்கள், பதினாறு கரங்கள் கொண்டவளாகவும் இந்த அன்னையைச் சித்திரிக்கின்றன.

பில்லிசூன்யம் போன்ற தீவினைகளைப் பொசுக்கும் மாதாவான இந்த தேவியை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில், விரதம் இருந்து எள்ளு புஷ்பம் கொண்டு அர்ச்சித்து, உரிய மந்திரங்கள் பாராயணம் செய்து வழிபட்டால், சகல தீவினைகளும் நீங்கும். சத்ரு பயம், மனக்கலக்கங்கள் அகலும். எடுத்த நற்காரியங்களில் தடைகள் யாவும் நீங்கி வெற்றி சர்வநிச்சயம் ஆகும்.

மேலும், 'மஹா பிரத்யங்கிராதேவியே போற்றி போற்றி’ என்று எளிய முறையில் துதித்து, பயபக்தியுடனும் பிரத்யங்கிராதேவியை வணங்கி வழிபட்டால், நமது பிரச்சனைகள் யாவும் நீங்கி வாழ்வு செழிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top