விருட்சங்களும், தெய்வீக சக்திகளும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விருட்சங்களும், தெய்வீக சக்திகளும் பற்றிய பதிவுகள் :

மாமரம்

மாமரம் மகாலட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இதன் காரணத்தினாலேயே எல்லாவிதமான பூஜைகளிலும் மாவிலைகள் பயன்படுத்தபடுகின்றன. சுபகாரியங்கள் செய்யும் போது வீடுகளில் மாவிலைகள் தோரணமாக கட்டி தொங்க விடப்படுகிறது.

அரசமரம்

அரசமரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வழிபாடும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கீழே தீபம் ஏற்றி வர புத்திர தோஷம் நீங்கும்.

ஆலமரம்

ஆலமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். அம்மரத்தின் விழுதுகள் உடல்குறைவை நீக்கும் தன்மையுடையது.

மருதாணிமரம்

மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் பழங்களை தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கெட்ட கனவுகள் வராது.

ருத்ராஷ மரம்

ருத்ராஷ மரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. ருத்ராஷ கோட்டையை உடலில் அணிந்து கொண்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்த அழுத்தம் சீராகவும் கோபம் குறையும். மனதில் சந்தம் உண்டாகும்.

ஷர்ப்பகந்தி

இம்மரத்தின் அருகே பாம்புகள் வராது. இம்மரத்தின் குச்சிகள் உடலில் கட்டி கொண்டால் பாம்புகள் தீண்டாது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top