விநாயகரின் ஆறுபடை வீடுகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விநாயகரின் ஆறுபடை வீடுகள் பற்றிய பதிவுகள் :

ஆறுபடை வீடு என்று சொன்னாலே முருகன் தான் நினைவிற்கு வருவார். ஏன்னென்றால் முருகனுக்குத்தான் திருச்செந்தூர், திருத்தணி, திருப்பரங்குன்றம், பழனி, பழமுதிர்சோலை, சுவாமிமலை என்னும் ஆறுபடை வீடு உள்ளது. ஆனால் முருகன் மட்டுமின்றி விநாயகருக்கும் ஆறுபடை வீடு உள்ளது. 

1. திருவண்ணாமலை :

இத்தலத்தில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் அல்லல் போம் விநாயகர். இவரை வழிபட அல்லல்கள் தீரும்.

2. விருத்தாசலம் :

இங்குள்ள ஆலயத்தில் எழுந்தருளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் என்று பெயர். செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்.

3. திருக்கடவூர் :

இங்கு எழுந்தருளும் பிள்ளையாருக்கு கள்ள வாரணப் பிள்ளையார் என்று பெயர். இவரை வணங்க நீண்ட ஆயுள் கிடைக்கும்.

4. மதுரை :

இங்கு அமைந்துள்ள பிள்ளையாருக்கு சித்தி விநாயகர் என்று பெயர். நினைத்தது நிறைவேற இவரை வணங்கலாம்.

5. பிள்ளையார்பட்டி :

இங்கு அருள் புரிபவர் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர். இவரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.

6. திருநாரையூர் :

இங்கு ஆட்சி புரியம் பிள்ளையாருக்கு பொண்ணாப் பிள்ளையார் என்று பெயர். இவரை வணங்க அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.

ஆறுபடை விநாயகரை போற்றி வணங்கினால் கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும். சித்தி பெற்ற விநாயகாரை நாளும் போற்றி நன்மைகளை பெறுவோம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top