பொய்கையில் சரவணன் பிறந்தமையால் அந்த இடத்திற்கு சரவணப் பொய்கை எனப் பெயர் வந்தது. கார்த்திகை பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் என பெற்றார். மதுரை மீனாட்சியால் முருகன் எனும் பெயர் சூட்டப்பட்டது.
சரவணம் என்றால் தர்ப்பை. பவ என்றால் தோன்றுதல். தர்ப்பைக் காட்டில் முருகன் தோன்றியதால் சரவணபவ என பெயர் வந்தது. இதற்கு இன்னொரு பொருளும் உண்டு.
ச - லக்ஷ்மிகடாக்ஷம்
ர - சரஸ்வதி கடாக்ஷம்
வ - மோக்ஷம்
ண - சத்ருஜயம்
ப - ம்ருத்யுஜயம்
வ - நோயற்ற வாழ்வு
சரவணபவ என்பதன் பொருள் விளங்கி சரவணனை வணங்கி வாருங்கள். தீராத வினையும் தீரும். ஆறாத நோயும் ஆறும். மன நிம்மதி கிடைக்க இந்த ஆறெழுத்தை தினந்தோறும் பராயணம் செய்யலாம். சரவணன் இருக்க பயம் ஏது.