பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர். தன்னை நாடி வரும் பக்தர்களின் பாவத்தை போக்குபவர் என்பது பொருள். பைரவரை வழிபட்டால் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும்.
பாதாள பைரவரை வழிபட்டால் கொடிய தோஷங்கள், வறுமை அகலும்.
அஷ்டமி திதி மற்றும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களில் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும், தொழிலில் லாபமும் கிடைக்கும்.
ஒவ்வொரு செவ்வாய்தோறும் பைரவரை வணங்கி வந்தால் கடன்கள் தீர்ந்து விடும்.
தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் உண்டாகும்.
பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணை, பசு நெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும்.
சனி மற்றும் ராகு, கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்வது நல்லது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஆறு மாதங்கள் தொடர்ந்து தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு செவ்வரளி மாலை சாத்தி வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.