எந்த ஒரு நல்ல செயலையும் செய்யும் முன் நல்ல நேரம், நல்ல நாள் பார்ப்பது அவசியம். நல்ல நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்களில் சுபகாரியங்களை செய்தால் அவை தடையின்றி நடைபெறும்.
எந்த காரியமாக இருந்தாலும் குறிப்பாக நல்ல காரியமாக இருந்தால் அது நல்ல விதமாக முடிய வேண்டும் என்று நல்ல நேரம், காலம் பார்க்கிறோம்.
கல்வி கற்க, சுப முகூர்த்தம் செய்ய, வாசக்கால் வைக்க, சீமந்தம் செய்ய போன்ற பலவிதமான நிகழ்ச்சிகளுக்கு நாம் நாள், நட்சத்திரம் பார்க்கிறோம்.
எந்த நட்சத்திர நாளில் என்ன சுபகாரியம் செய்யலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது என்பது பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக் கொள்வோம்.
நட்சத்திரங்களும் சுபகாரியங்களும் :
அஸ்வினி :
திருமணம், சமுத்திர பயணம், மாங்கல்யம் செய்தல், உபநயனம் செய்ய உகந்ததாக உள்ளது.
ரோகிணி :
திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் முதலியன செய்ய உகந்ததாக அமைந்துள்ளது.
மிருகசீரிஷம் :
திருமணம் மற்றும் சுப முகூர்த்தம் செய்ய உகந்தது.
புனர்பூஷம் :
திருமணம் மற்றும் உபநயனம் செய்ய உகந்தது.
பூசம், மகம், உத்திரம், அஸ்தம் :
திருமணம் செய்ய உகந்தது.
சுவாதி :
கிரகப்பிரவேசம் மற்றும் திருமணம் செய்ய உகந்ததாக அமைந்துள்ளது.
மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம் :
திருமணம் செய்ய உகந்ததாக அமைந்துள்ளது.
உத்திரட்டாதி, ரேவதி :
சுப முகூர்த்தம் செய்ய உகந்தது.
திதிகளும், சுபகாரியங்களும் :
துதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவை சுப முகூர்த்தம் செய்ய முக்கிய திதிகளாகும்.
லக்னங்களும், சுபகாரியங்களும் :
ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் ஆகியவை சுப முகூர்த்தம் செய்ய நல்ல லக்னங்களாகும்.